Thiruvarur: திருத்துறைப்பூண்டியில் உள்ள பள்ளிகளிக்கு இன்று விடுமுறை ... என்ன காரணம் தெரியுமா?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பழமை வாய்ந்த பிறவி மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.- இதனையடுத்து கோயில் முழுவதும் கடந்த 10 மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோயிலின் சிறப்புகள்
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். மாங்கல்ய வரம் அருளும் திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் இந்த கோயில், அஸ்வினி நட்சத்திரக்காரகள் வழிபட சிறந்த தலமாகும். இதற்கான காரணம் அந்த நட்சத்திரன் தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் இறைவனை வழிபடுவதே ஆகும்.
முன்னொரு காலத்தில் புராணங்களில் சொல்லப்பட்டது போல அரக்கர் குலத்தில் பிறந்த ஜல்லிகை என்ற பெண் சிறந்த சிவபக்தையாக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு மனிதர்களை சாப்பிடும் விருபாட்சன் என்கிற ராட்சச கணவன் அமைந்தான். அந்தண சிறுவன் ஒருவன் ஒரு முறை தனது தந்தைக்கு சிராத்தம் செய்ய கங்கை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான். அப்போது அந்த அந்தண சிறுவனை சாப்பிட விருபாட்சன் முயற்சித்தான். ஆனால் அந்தணர்களை கொல்வது மிகவும் பாவமான செயல் என கூறி ஜல்லிகை தன் கணவனை தடுத்தாள். அவளின் பேச்சை கேட்காத விருபாட்சனோ அந்த சிறுவனை கொன்று சாப்பிட்டான். அச்சிறுவனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே விஷம் ஏறி விருபாட்சன்இறந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜல்லிகை என் கணவரின்றி நான் உயிர் வாழ விரும்பவில்லை என்றும், உலகில் அரக்க குணம் இல்லாத மனிதர்களை இனி பிறக்க வேண்டும் என அம்பாளிடம் வேண்டினார். ஜல்லிகையின் சிவபக்தியை போற்றி விருபாட்சன் மற்றும் அந்தண சிறுவனையும் உயிர் பிழைக்க வைத்தார் அம்பாள்.
பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் இறைவன் மேற்கு நோக்கிய திசையில் இருக்கிறார். மேலும் இங்கு சிவனின் கஜசம்ஹார மூர்த்தி இருப்பதும் இக்கோயிலின் விசேஷ அம்சங்களாகும்.