மேலும் அறிய

என்ன சொல்லியது வேளாண் பட்ஜெட்? அனைவருக்கும் பயனளிக்கும் ‛ஹைலைட்ஸ்’ !

மொத்தம் மானியக் கோரிக்கைகளில் அடிப்படையில் பட்ஜெட்டில் 34220 கோடியே 64 லட்சத்து 93 ஆயிரம் ஒதுக்கீடு. 

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் தனது வேளான் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது.இதன்படி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு அடுத்து தனக்கென தனி விவசாய பட்ஜெட் கொண்ட மாநிலமாகிறது தமிழ்நாடு. விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

சரியாக 10 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யத் தொடங்கினார் அமைச்சர். உழவர் நலனின்றி உழவுத்துறை இல்லை என பேச்சைத் தொடங்கிய அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில்  சில ஹைலைட்ஸ். 

*முதலாவது விழிப்புணர்வு, இரண்டாவது வேளாண்மை புரட்சி, மூன்றாவது அறிவியல் புரட்சி. 

*வேளாண் வந்ததால் கவிதைகள் கலைகள் வாழ்க்கை தோன்றியது. நிச்சயமான வாழ்க்கைக்கு மனிதனை வேளாண்மைதான் அழைத்து வந்தது. 

*திருவள்ளூவரும் தொல்காப்பியரும் வேளாண்மையை உதவி என்கிறார்கள்.

பட்ஜெட்டுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் 

- பல மாவட்டங்களுக்கு சென்று உழவர்களைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்கப்பட்டன. அரசு அலுவலர்களுடன் 18 மாவட்ட விவசாயிகளின் கருத்துகளும், உலகளாவிய நிபுணர்களிடம் காணொளி வாயிலாகவும் கருத்துகள் கேட்கப்பட்டது. வேளாண் வங்கிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 

-வேளாண்மையில் உள்ள இன்றைய சவால்கள், இளைஞர்களிடம் ஆர்வமின்மை,சாகுபடிக்காகும் அதிகத் தொகை,
நீர்வளச் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள்

-இந்த வேளான் பட்ஜெட் தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது. உணவுப்பாதுகாப்பும் ஊட்டச்சத்து பாதுகாப்பும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாம் எட்டவேண்டியது இலக்கு. 

முதல்வரின் மூன்று தொலைநோக்குப் பார்வை
 
-11.75 லட்சம் ஹெக்டேர்கள் பயிர் செய்யப்படும். தரிசு நிலங்கள் பரிசு நிலங்களாகும். 11.75 லட்சம் தரிசு நிலங்களில் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், கீரைகள்  75சதவிகிதமாக நிகர சாகுபடிப் பயிர்கள்

- 10 லட்சம் ஹெக்டேருக்குள் உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.

 -உணவு தானியங்கள் தேங்காய் சூரியகாந்தி ஆகிய பணப்பயிர்களில் வேளாண் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடத்தில் தமிழ்நாடு இடம்பெற வழிவகை செய்யப்படும்.

- மாணாவாரி நில மேம்பாடு,தரிசுநில மேம்பாடு,இயற்கை வேளாண்மை,சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணையம் ஊக்குவிப்பு,ஒருங்கிணைந்த பண்ணயம் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு,சொட்டுநீர் பாசணம் விரிவாக்கம்,பயிர் மேலாண்மை வளப்படுத்துதல்,இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்,வேளாணில் மகளிர் முக்கியத்துவம்,வேளாண்மையில் தகவல்தொழில்நுட்பம்,
கிராம அளவிலான வேளாண் தொகுப்பு திட்டம்

அறிவிக்கப்படும் திட்டங்கள்: 

கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம். 

வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைப்பது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் 2.0.  தன்னிறைவு பெற்ற கிராமங்கள் 12524 கிராமப்பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டிலும் ஐந்தில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு. இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.19.35 லட்சம் தரிசு நிலங்கள் சாகுபடி பரப்புகளை உயர்த்த தயார் நிலையில் உள்ளன.

இதன் மூலம் நீர்வள ஆதாரங்களை உயர்த்துதல்,சூரிய சக்தி பம்புகளை ஊக்குவித்தல்,நுண் பாசண ஊக்குவிப்பு,அதிக அளவு பயிர்கடன்கள்,
கால்வாய்களை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு 250 கோடி ரூபாய் நிதி. 

முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்

-மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 3 லட்சம் ஹெக்டர் தேர்வு.  பண்ணைக்குட்டைகள், வயல் வெளிவரப்புகள் போன்ற மழைநீர் சேகரிப்புகள் உருவாக்கி விதைப்பதற்கான தரமான விதை

-பன்னை இயந்திர வாடகை மையங்கள் உருவாக்கப்படும்.  இதன்மூலம் 3 லட்சம் மானாவாரி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டம் 144கோடியே 64 லட்சம் ரூபாயில் நடத்தப்படும்

இயற்கை வேளாண் வளர்ச்சித்திட்டம்

-நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேளாண் விலைபொருட்கள் தேவை. இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப்பிரிவு. இதற்கு இடுபொருள் மானியம் தரப்படும். திட்டம் 2021-22 ல் செயல்படுத்தப்படும். வேளாண் கிடங்குகளிலேயே இந்த உற்பத்தி விற்பனைக்கான வழிவகை. செயற்கை உரமிடும் பயிர்களைக் கண்காணிக்க நடவடிக்கை. இயற்கை விவசாயிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சான்றிதழ். இதற்கு 33கோடியே 3 லட்சம் ரூபாய் செலவு


நெல் ஜெயராமன் மரபு சார் நெல் பாதுகாப்பு இயக்கம்


தமிழ்நாட்டில் மொத்தம் 32 ரக மரபுசார் சம்பா நெற்பயிர்கள் காணப்படுகின்றன. இவை திருவள்ளூர் கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். இதற்கு 25 லட்சம் ரூபாய் செலவு. 

இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோர் ஆக்குதல்

வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக்குவதற்கு தேவையான பயிற்சி பட்டப்படிப்பில் வழங்கப்படும். 
இயற்கை எரு, மரக்கன்று, காளான் உற்பத்தி, பசுமைக்குடில், நுன்னீர் பாசன சேவை மையம் போன்ற தொழில்கள் செய்திட வழிவகை. இதற்கு 2 கோடி 68 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கீடு

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாடு இயக்கம்

கணினி தெரிந்த அளவுக்கு கழனி தெரியவில்லை. 2500 இளைஞர்களுக்கு ஒட்டுக்கட்டுதல், பதியன் போடுதல், கவாத்து செய்தல், தோட்டக்கலை இயந்திரங்களை இயக்குதல், பம்புகளை பழுதுநீக்குதல் போன்றவற்றில் பயிற்சி. 
5 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும்


பனை மேம்பாட்டு இயக்கம்

பனைமரங்களைப் பாதுக்காக்கவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் 76 லட்சம் பனை விதை மற்றும் 1 லட்சம் பனைமரக்கன்றுகள் 36 மாவட்டங்களில் வழங்க நடவடிக்கை

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் பனை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்

தரமான பனைவெல்லம் தயாரிக்க பயிற்சி

கருப்பட்டி காய்ச்சும் இயந்திரம் 

பனைவெல்லம் கருப்பட்டிகளை நியாயவிலைக்கடைகளின் மூலம் விற்க நடவடிக்கை

பனைமரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும்


3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நெல் உற்பத்தி சிறப்புத்திட்டம்

உணவு தானிய உற்பத்தியில் 125 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியை எட்ட இலக்கு. 
நெற்பயிர் 19 லட்சம் ஹெக்டரில் சாகுபடி 75 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி இலக்கை அடைய திட்டம். 
அறுவடைக்குப்பிறகான இழப்புகளை க்குறைக்க
விவசாயிகளுக்கு தார்பாய்கள் 

52 கோடியே 2 லட்சம் ரூபாய்

2021-22 குறைந்த பட்ச குவிண்டாலுக்கு சன்னரக நெல்லுக்கு 70 -100வும் சாதாரண ரகத்துக்கு 50 -75 ரூபாயாக ஊக்கத்தொகை அறிவித்து கொள்முதல் செய்திடும். இதனால் கூடுதலாக அரசுக்கு 99 கோடியே 38 லட்சம் செலவு

சிறுதானிய இயக்கம்

மழை அதிகம் பொழியாத இடங்களில் சிறுதானிய உற்பத்திக்கு பயிற்சி

சிறுகுறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க விதை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும்

குறுதானிய அரிசியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து சென்னை கோவையில் பொதுவிநியோகம் கீழ் விநியோகம் செய்ய நடவடிக்கை

நீலகிரி கோத்தகிரி பழங்குடிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கான பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். இதற்கு 12கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீடு

பணம் தரும் பயிர் உற்பத்தி திட்டம்

பயிர் வகைகளை வளர்க்க விதை மானியம். இவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து சத்துணவுதிட்டம் போன்றவற்றில் உபயோகிக்கப்படும்.

துவரை, உளுந்து, பச்சைப்பயிறு 61000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய முடிவு

இதற்கு 45 கோடி 91 லட்சம் ஒதுக்கீடு

ஏற்றம் தரும் எண்ணெய் வித்து திட்டம்

நெல் தரிசில் எல் ஆமணக்கு தனிப்பயிராக வளர்க்க சிறப்புதிட்டங்கள்.இதற்கு
25 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு

நீடித்த நிலையான பருத்தி திட்டம்

1.7 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி, இந்திய பருத்திக்கழகம் பருத்தி கொள்முதல் செய்திடவும், நீண்ட இழை பருத்தி சாகுபடி 25000 ஹெக்டருக்கு அரசு நடவடிக்கை. 


பருத்தி மதிப்பீடுக்கு அரசு நடவடிக்கை

50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் திருவாரூரில் நிறுவப்படும்

16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

சீர்மிகு தென்னை சாகுபடி


தென்னைய்யில் உற்பத்தியை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத் தொகுப்புத்திட்டம் 

பல்லடுக்கு சாகுபடி விவசாயமுறை மூலம் பலவகைப்பயிர்களை சாகுபடி செய்ய

17 லட்சம் தென்னை கன்றுகள் உற்பத்தி மற்றும் விநியோகம்

20000 ஹெக்டரில் தென்னைகான சொட்டுநீர் பாசனம்

தென்னை மதிப்புக்கூட்டு மையம் தஞ்சையில் நிறுவப்படும்

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

10 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.


அண்ணா பண்ணை மேம்பாடு

புதுக்கோட்டை குடுமியான்மலையில் உள்ள அண்ணா பண்ணை அண்ணா பன்முக வேளாண் விதைப்பண்ணையாக மேம்படுத்தப்படும். வேளான் தொழில்நுட்ப செயல் விளக்கப்பணிகள்.27 கோடியே 89 லட்சம் ரூபாய் மாநில நிதியில் இது செயல்படுத்தப்படும்.

கூட்டுப்பண்ணையத் திட்டம்

1லட்சத்து 10 ஆயிரம் ஒருங்கிணைத்து 1100 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள். வேளான் இயந்திரங்கள் கொள்முதல் குழுவுக்கு 5 லட்ச ரூபாய் நிதி. சந்தைப்படுத்த சிறிய இலகு ரக சந்தை வாகனங்கள் வாங்க முன்னுரிமை. இதற்கு 55 கோடியே 55 லட்சம் செலவில் மாநில அரசு நிதி.

அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பன்னையம்

13300 விவசாயக் குடும்பங்கள் பயன்பெற ஒருங்கிணைந்த பன்னையம்

59 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

வேளாண் மண்டலக்குழுக்கள்

வேளாண் துறை, நீர்வள ஆதாரத்துறை, வனத்துறை, வேளாண் கல்லூரிகளின் நிபுணர்களைக் கொண்டு வேளாண் மண்டலக்குழுக்கள். 

மாநில அளவில் மரபுசார் வேளாண் குறித்த அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும். 

விவசாயத்துக்கான இலவச மின்சாரம்

22 லட்சத்து 19 ஆயிரம் மின்மோட்டர்களுக்கு மின்சாரம் வழங்கபப்டுகிறது. 
ஒவ்வொரு பம்புசெட்டுக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.20000 அரசே மின்சார வாரியத்துக்கு செலுத்துகிறது. இதற்கு இந்தாண்டு 4508 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.


- வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்குப் பரிசு. இதற்கு மாநில அரசு 6 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு
-மாநில அளவிலான வேளாண் உற்பத்தி நிலைக்குழு தலைமைச்செயலாளர் தலைமையில் நிறுவப்படும். இந்தக்குழு வேளாண் மற்றும் அது சார்ந்த துறைச்செயலாளர்களுடன் கூட்டம் நடத்தப்படும்

- வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு.

- பயிர்காப்பீட்டுத்திட்டத்துக்கு 2377 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

- கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 138 கோடி 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

முதலமைச்சர் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் திட்டம்

ஊரகப் பகுதிகளில் 12 ரகக் காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைத்தளைகள் மானியத்தில் வழங்கப்படும். 6 வகை விதைகள் அடங்கிய 1 லட்சம் மாடித்தோட்ட தலைகள் நகர்புறங்களில் வழங்கப்படும். காய்கறிகள் பயிர்போடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 15000 ரூபாய் அளவிலான இடுபொருள் வழங்கப்படும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 2 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம். 

-16 லட்சம் தளைகள் அரசு உற்பத்தி செய்யும். நெல்லி 200 ஏக்கர் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும்.
 தோட்டக்கலை கிடங்குகள் அமைக்கப்படும்.இதற்கு 12கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு.

- கடலூர் பன்ரூட்டியில் பலாவுக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும். 5 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய மாநில அரசு

- சிக்கன நீர் பாசனத் திட்டம் 982 கோடியே 48 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும் 

- வடலூரில் புதியதாக ஒரு கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். 

- வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படும், 185 ட்ராக்டர்கள் உட்பட இயந்திரங்கள் கொள்முதல். 

- நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரித்தல்.இதில் 5 கோடி ரூபாயில் பராமரிப்பு

மழைநீரை விளைநிலங்களில் சேமிக்க பன்னைக்குட்டை

- 1 லட்சம் ரூபாய் வரையில் 100 சதவிகித மானியத்துடன் 5 லட்சம் பன்னைக்குட்டைகள். மானாவரி விவசாயிகளுக்கு முன்னுரிமை.

- கிணற்றிலிருந்து பாசானத்துக்கு நீர் இறைப்புக்கு புதிய பம்புகளை வாங்க 1000 விவசாயிகள் பயன்பெற ஒரு மோடாருக்கு 10000 ரூபாய் மானிய வீதம் ரூ 1 கோடியில் திட்டம். 

- உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புணரமைக்கப்படும். உழவர் சந்தைகளின் கழிவுகள் உரமாக்க திடக்கழிவு மேலாண்மை வசதிகள் 2 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்படும். புதிய உழவர் சந்தைகள் 6 கோடி நிதியில் அமைக்கப்படும். உழவர் சந்தையில் காய்கறி விலைகள் டிஜிட்டல் முறையில் அறிவிப்பு. முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் நிறுவப்படும். 
 
- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மிளகுக்கான பதப்படுத்தும் மையம் காரவல்லி பகுதியில் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் 

- நீலகிரி மாவட்ட   எடப்பள்ளி ஒருங்கிணைந்த வேளாண் சந்தை வளாகம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

-ஏற்றுமதி மூலம் ஏற்றம் காணும் திட்டத்தின்கீழ் சென்னை கிண்டியில் உள்ள வேளாண் ஏற்றுமதி சேவை மையம் விரிவாக்கம் செய்யப்படும். முருங்கைக்கு என சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும். 

-  சென்னை கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும். ஒரு கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதியில் செய்யப்படும்.

- தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்புப்பயிர்களுக்கு புவி சார் குறியீடு பெறுதலில் மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள், கொல்லிமலை பலா, பண்ரூட்டி பலாவுக்கு புவிசார் குறியீடு பெற ஆவண செய்யப்படும். 

 - உணவுப்பதப்படுத்தலுக்கு என தனி அமைப்பு உருவாக்கப்படும். அதற்கான விழிப்புணர்வினை விவசாயிகளிடம் ஏற்படுத்த நடவடிக்கை. அதற்காக நடப்பு நிதியாண்டில் அமைப்பு தொடக்கம். 

- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. 573 கோடியே 74 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு. தமிழ்வழி  பயிலும் மாணவர்களை வேளாண்மையில் ஊக்கப்படுத்த 25 லட்சம் நிதி ஒதுக்கீடு. கிருஷ்ணகிரியில் புதிய தோட்டக்கலைக்கல்லூரி ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். 

-பசுந்தீவன உற்பத்து ஊக்குவிப்புக்கு 1 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு, பசுந்தீவன வங்கிகள் ஏற்படுத்தப்படும்.

- திருச்சி -நாகை இடையிலான பகுதி வேளாண் பெருந்தடமாக அறிவிக்கப்படும்.புதிய தனியார் முதலீடுகளை ஈர்க்க இந்தத் தடம் உதவும்.


மொத்தம் மானியக் கோரிக்கைகளில் அடிப்படையில் பட்ஜெட்டில் 34220 கோடியே 64 லட்சத்து 93 ஆயிரம் ஒதுக்கீடு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget