மேலும் அறிய

TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..

இன்று தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளில் இன்று 7-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல்  பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

07.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

09.05.2023 முதல் 10.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

07.05.2023 முதல் 11.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

RSCL வல்லம் (விழுப்புரம்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 9, BASL முகையூர் (விழுப்புரம்), தல்லாகுளம் (மதுரை) தலா 8, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), வலங்கைமான் (திருவாரூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கெட்டி (நீலகிரி) , RSCl-2 நெமூர் (விழுப்புரம்) தலா 7, செஞ்சி (விழுப்புரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), RSL-2 கேதார் (விழுப்புரம்), சென்னிமலை (ஈரோடு), வேப்பூர் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), RSL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), மதுரை தெற்கு (மதுரை), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), மதுரை வடக்கு (மதுரை) தலா 6, நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), கோடநாடு (நீலகிரி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மீ மாத்தூர் (கடலூர்), திருவாரூர், அன்னவாசல் (புதுக்கோட்டை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 5 செ மீ மழை பதிவாகியுள்ளது.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

07.05.2023 மற்றும் 08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10.05.2023 மற்றும் 11.05.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் 08.05.2023 தேதிக்குள்   கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget