இன்றும், நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![இன்றும், நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. Heavy rainfall very likely at isolated places over Tamilnadu, Puducherry and Karaikal இன்றும், நாளையும் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/16/22ff505fd594451b5a5f497f0364a8bf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை துறையின், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், "தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும், நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்" என்று தெரிவித்தார். மேலும், நாளை தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)