கரூரில் இடியுடன் கூடிய கனமழை - மகிழ்ச்சியில் மக்கள்
கரூரில் காலை முதல் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
கரூரில் காலை முதல் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும்போது அனல் காற்று வீசுவதால் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் கரூர் மாநகரில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்தது. கரூர் மாநகர பகுதியான பசுபதிபாளையம், காந்திகிராமம், ஜஹகர்பஜார், தான்தோன்றிமலை, சுங்ககேட் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
தற்போது பெய்து வரும் மழையால் கரூர் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரூரில் பிரதான வாய்க்கால் முழுவதும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் கேரளா மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது .அதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 62 அடியை தாண்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 65 காண அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து விவசாய பணிக்கான விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது .ஆனால் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றின் பிரதான வாய்க்காலில் தூர்வாரப்படவில்லைm இந்நிலையில்.தண்ணீர் திறந்தால் பிரதான வாய்க்காலில் தண்ணீர் வரத்தை தடைபடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்