TN Rain Alert: மழைக்கு தயாரா மக்களே.. இன்று 14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18.10.2023 மற்றும் 19.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சிற்றாறு (கன்னியாகுமரி) 10, திற்பரப்பு (கன்னியாகுமரி) 9, வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 6, சாத்தூர் (விருதுநகர்), சிவலோகம் (கன்னியாகுமரி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), ஆண்டிபட்டி (தேனி) தலா 5, கிளன்மார்கன் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 4, புத்தன் அணை (கன்னியாகுமரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சிவகிரி (தென்காசி), பாலமோர் (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 3, அரண்மனைப்புதூர் (தேனி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), ஆழியார் (கோயம்புத்தூர்), கழுகுமலை (தூத்துக்குடி), பார்வூட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), அரியலூர் PTO, காக்காச்சி (திருநெல்வேலி), ஆயிக்குடி (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 2, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சோலையார் (கோயம்புத்தூர்), பெரியகுளம் AWS (தேனி), கடம்பூர் (தூத்துக்குடி), சிறுவாணி ஆதிவாரம் (கோயம்புத்தூர்), சிவகாசி (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), சண்முகாநதி (தேனி), களியல் (கன்னியாகுமரி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), ராஜபாளையம் (விருதுநகர்), போடிநாயக்கனூர் (தேனி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), குழித்துறை (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), நிலக்கோட்டை (சென்னை), கடல்குடி (தூத்துக்குடி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), பெரியாறு (தேனி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
13.10.2023 மற்றும் 14.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
13.10.2023 மற்றும் 14.10.2023: லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.