TN Rain Update: இன்றும் தமிழகத்தில் கனமழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்!
திருப்பூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை தொடருமென சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகிவுள்ளது. சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/BVX61cF15Y
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 8, 2022
மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலில்:
வானிலை நிலவர விவரம்
08.07.2022 முதல் 10.07.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
08.07.2022 முதல் 11.07.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
08.07.2022 முதல் 12.07.2022 வரை: கர்நாடகா கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 8, 2022
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
07.07.2022 - 09.07.2022: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07.07.2022- 08.07.2022 : ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07.07.2022 - 11.07.2022: இலட்சத்தீவு பகுதி, கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.