மேலும் அறிய

TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

வரலாறு காணாத மழையால் மழை வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி. 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பதிவாகியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.

கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் கோரத்தாண்டவம், நேற்று காலை முதல், வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கொடித்தீர்த்து வருகிறது. இதில், அண்மைக்கால வரலாறுகாணாத அளவில் சீர்காழியில் மட்டும், 24 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான முதல் குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, பகுதியாக மாறி, பிறகு தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, தற்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்ட ஆகிய மாவட்டங்களில் பெருமழையாக பெய்துக் கொண்டிருந்த இந்த காற்றழுத்தம், நேற்று முன்தினம் வலுவடைந்து சற்று நகர்ந்து, கடலூர், டெல்டா மாவட்டங்களை நேற்று காலைமுதல் மையம் கொண்டிருந்தது. 

TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கன மழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. இதிலும், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது மழை மாவட்டம் என்றழைக்கலாம் என்றளவில் மழை பெய்து தீர்த்து வருகிறது. மயிலாடுதுறையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிக கனமழை பெய்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்பனார்கோவிலில் 20 செ.மீ, கொள்ளிடத்தில் 19 செ.மீ, தரங்கம்பாடியில் 18செ.மீ., மணல்மேட்டில் 11 செ.மீ. மயிலாடுதுறையில் 16செ.மீ மழையும் பதிவானது. ஆனால், மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு, நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டும் வெறும் 14 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பதிவானது. கடந்த 24 மணி நேர அளவில் பார்க்கும்போது, 43 செ.மீ மழை சீர்காழியில் மட்டும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சீர்காழியின் பல பகுதிகள் தற்போது வெள்ளநீரில் மிதக்கின்றன என்றால் மிகையில்லை. புதிதாக உருவான பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்கள் ஏரிகளாகவும், அவற்றில் இருக்கும் வீடுகள், மிதக்கும் வீடுகள் போலவும் காட்சியளிக்கின்றன. மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

வரலாறு காணாத மழை பதிவாகியதால், அரசு இயந்திரம் முதலில் திணறினாலும், தற்போது முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ரெட் அலர்ட் எனும் மிக கனமழை பெய்யும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டதால், முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவில் பேரில் எடுக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் வெள்ளத்தில் பலபகுதிகள் தவிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது. 

மேலும் மழை பெய்யும் என்பதாலும் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியிருப்பதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது,  மின் கம்பங்களை தொடக்கூடாது, கொதிக்க வைத்த குடிநீரை அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த அக்டோபர் மாதத்திலேயே குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பதிவாகி இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையின் அளவை, கடந்த மூன்றுதினங்களில் மட்டுமே கிட்டத்தட்ட பெய்திருப்பதால், மயிலாடுதுறை மாவட்டத்தை, தற்போதைக்கு மழை மாவட்டம் என்று அழைத்தாலும் தவறில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 – 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!

மேலும் மழை தொடர்பான பல செய்திகளை காண  :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
Embed widget