மேலும் அறிய

வெளுத்து வாங்கிய கனமழை.. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... அமைச்சர் அறிவிப்பு

Puducherry School College Holiday: கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (19.10.2024) விடுமுறை அறிவிப்பு.

புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை பெய்துவருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமை (19.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வியமைச்சர்  ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வரும் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவருமான ரங்கசாமி தலைமையில் முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த பருவமழையை எதிர்கொள்ள துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அனைத்து நீர் நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழிப்பாதைகளை துரிதமாக தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கக்கூடிய நிவாரண மையங்களான பள்ளிகளின் கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அக்கட்டிடங்களை, குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலத்துக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளாட்சித்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்

மழை, வெள்ள காலங்களில் மீட்புப் பணிகளுக்காகத் தேவைப்படும் உபகரணங்களை பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மழையில் சாயும் மரங்களை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மழை பற்றிய வானிலை எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படாத வகையில் தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மின்கம்பங்களின் நிலைத்தன்மையை ஆய்வு செய்து அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.அனைத்து அரசுத் துறைகளிலும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் திறக்க வேண்டும். மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் உடனுக்குடன் நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான பம்பு உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்பது உள்ளிட்ட உத்தரவுகளை, முதல்வர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் வலியுறுத்தினார்.

வானிலை மையம் எச்சரிக்கை:

19.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
20.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்   ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
22.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
23.10.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget