மேலும் அறிய

Gujarat Election: குஜராத்தில் தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு...! ஆர்வத்துடன் குவியும் வாக்காளர்கள்...!

இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி, அமித்ஷா, குஜராத் முதல்வர் புபேந்திர படேல் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர். 

இரண்டாம் கட்டத் தேர்தல்:

 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது, தேர்தல் களத்தில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். அகமதாபாத், வடோதரா போன்ற குஜராத்தின் வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 2 கோடி 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர், 1லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

இதற்காக 26,409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 

26 ஆயிரம் வாக்குச்சாவடிகள்:

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1 ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில்  மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமான தேர்தல் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமான தேர்தல் 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதற்கட்டத் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர் போன்ற 14 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்களிப்பதற்கு 26 ஆயிரத்து 409 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 36 ஆயிரம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

வாக்களிக்கும் பிரதமர் மோடி:

குஜராத்தில் மொத்தமாக 4 கோடியே 91 லட்சத்து 17 ஆயிரத்து 708  வாக்களர்கள் உள்ள நிலையில் , இரண்டாம் தேர்தலில் 2 கோடியே 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.  மொத்தமாக 1 லட்சத்து 13 ஆயிரம் பணியாளர்கள், அதிகாரிகள் இத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இரண்டாம் கட்ட தேர்தலை பொருத்தவரை வட மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள  வதோதரா, காந்திநகர், அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவே உற்றுநோக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பிரதமர் மோடி இன்று தனது ஆகமதாபாத்தில் உள்ள சபர்மதி தொகுதி பள்ளியில் நேரில் சென்று வாக்களிக்க உள்ளார். அதே போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமபாத் நரன்புராவில் உள்ள அங்கூர் தொகுதி, காமேஷ்வர் கோவில் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 10.30 மணியளவில் வாக்களிக்கிறார். குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல் அகமதாபாதி உள்ள ஷிலாஜ் தொடக்க பள்ளியில் வாக்களிக்க உள்ளார். 

பலத்த எதிர்பார்ப்பு:

கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது. 

ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டனர். இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் பிரச்சாரம் சற்று மந்தமாகவே இருந்தது. 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கடைசி நாளான நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget