போர் போட கட்டணம்...தமிழகத்திற்கு பொருந்தாது... மத்திய அரசின் உத்தரவை மறுத்த தமிழக நீர்வளத்துறை...!
CGWA லிருந்து என்.ஓ.சி. அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
![போர் போட கட்டணம்...தமிழகத்திற்கு பொருந்தாது... மத்திய அரசின் உத்தரவை மறுத்த தமிழக நீர்வளத்துறை...! ground water commission order is not applicable to tamil nadu போர் போட கட்டணம்...தமிழகத்திற்கு பொருந்தாது... மத்திய அரசின் உத்தரவை மறுத்த தமிழக நீர்வளத்துறை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/06/0d21c80db3160cb53973a04fe0adf4c21657103632_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நிலத்தடி நீர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என மாநில நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நீச்சல் குளம்,உட்கட்டமைப்பு, சுரங்க திட்டங்கள், இண்டஸ்டரியல், குரூப் ஹவுசிங் சொசைடிகள், நகர்ப்புற பகுதிகளில் மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், வீட்டு பயன்பாட்டு, மற்றும் குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்கள், தற்போது அல்லது புதிய நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் CGWA லிருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பூர்த்தியடைந்த விண்ணப்பங்களை ரூ.10 ஆயிரம் பதிவு கட்டணத்துடன் சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. அதேசமயம் CGWA லிருந்து என்.ஓ.சி. அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக மக்களிடம் மிக வேகமாக பரவியது. சமூக வலைத்தளத்தில் பலரும் இதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
#JUSTIN | நிலத்தடி நீருக்கு கட்டணம்: தமிழ்நாட்டிற்கு பொருந்தாது - தமிழ்நாடு அரசுhttps://t.co/wupaoCQKa2 | #TNGovt #Groundwater pic.twitter.com/FUoFpBfhRd
— ABP Nadu (@abpnadu) July 6, 2022
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சக தலைவர், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண். 3/ 2022 தமிழ்நாட்டிற்கு பெருந்தாது எனவும், நில நீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)