பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிகமாக மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு - கரூர் ஆட்சியர் தகவல்
அரசியலமைப்பு சட்டமானது நமக்கு ஓட்டு போட உரிமை உள்ளது. நீங்கள் நினைத்தாலும் தேர்தலில் நின்று போட்டியிடலாம் அதற்கான அதிகாரம் இந்த அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வந்தது. அதையொட்டி தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் மூக்கணாங்குறிச்சி கிராம ஊராட்சி தம்மநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிரமசபை கூட்டத்திற்கு மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம குடிநீர் விநியோக செயல்திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து இக்கிரமசபை கூட்டத்தில் கூட்டப் பொருளாக விவாதிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
குடியரசு தினம் கொண்டாடப்படுவது நோக்கம் நாம் அரசியலமைப்பு சட்டம் இயற்றிய இந்த நாளிலே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அரசியலமைப்பு சட்டமானது அனைத்து மதத்தினர் சமமான நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. நமக்கு ஓட்டு போட உரிமை உள்ளது. நீங்கள் நினைத்தாலும் தேர்தலில் நின்று போட்டியிடலாம் அதற்கான அதிகாரம் இந்த அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது.
நம் நாட்டிலே பெரிய சக்தி அரசியலமைப்பு சட்டம் தான். நமக்கு சில அடிப்படை உரிமைகள் உண்டு அதற்கும் அடிப்படை சுதந்திரம் நாம் அனைவருக்கும் உள்ளது. தொடர்ந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி திறன் பட செயல்படுத்துவது தமிழ்நாடு மட்டும் தான். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்களாட்சி முறையில் பெரிய நாடு நம்ம நாடு தான். அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் சுத்தமான சுகாதாரமான உணவு கிடைப்பது உடன் மருத்துவமனையில் பெரிய அளவில் சிகிச்சை மேற்கொள்வது மற்ற நாடுகளை விட இலவசமாக நம்ம நாட்டில் செயல்படுகிறது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லாத் துறைகளும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்கள் அனைவருக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக யார் யாருக்கு வீட்டுமனை இல்லையோ வீடு கட்டுவதற்கு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இடம் இல்லாதவர்களுக்கு வரும் காலங்களில் எல்லாருக்கும் இடம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சோகம் சார்பில் சுகாதாரமாக வாழ்வதற்கு பல்வேறு கட்டமைப்புகள் செய்து வருகிறது. பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு மானியம் விட அதிகமாக தமிழ்நாடு அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்றதற்கு பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். பொது மக்கள் அனைவருக்கும் நன்றியினை வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார். முன்னதாக அரசியலமைப்பு முகப்பு தொடர்பாக உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். பின்னர் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாந்தோணிமலை காளியம்மன் கோவில் அன்னத்தானக்கூடத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களுடன் உணவருந்தினார்.