Gram Sabha: நாளை கிராம சபைக் கூட்டம்: ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை குறித்துத் தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (02.10.2022 ) அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? பார்க்கலாம்.
ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1 ), இந்திய சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இதில் கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்கள், வரவு-செலவு திட்டங்கள், தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (02.10.2022 ) அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .
* 2020 - 2021 மற்றும் 2021- 2022 நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் அடித்து, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு.
* 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.
* உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை குறித்துத் தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.
* கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
* ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஏழு நாட்களுக்கு முன் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
* தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.
* மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை புகார் பொதுமக்கள் தெரிவிக்க பட்டால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரின் அதிகாரம் பறிக்கப்படும்.
* கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.
* கிராம சபைக் கூட்டம் இல்லை என்றால், உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் தனிப் பிரிவு எண்- 044 25672345, 044 25672283
முதலமைச்சர் எண் - +91 9443146857
தொலைநகல் எண் - 044 25670930, 044 25671441
இவ்வாறு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.