5 முஸ்லிம்கள் உள்பட 12 சிறை கைதிகள் விடுதலை.. ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு 12 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய 49 கைதிகள் பட்டியலில் இருந்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு முதல் சிறைக்கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விடுவிக்கப்பட இருக்கும் 12 கைதிகளில் 7 பேர் மத கலவரத்தின்போது கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏழு பேரில் 5 பேர் முஸ்லிம்கள் மற்றும் 2 பேர் இந்துக்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி அபு தாஹிர், குண்டு ஜாஹுர், உமாயில் பாபு, ஹாகுல் ஹமீத் மற்றும் ஹாரூன் பாஷா ஆகிய 5 முஸ்லிம் கைதிகள் மதவாத கொலைகளில் ஈடுபட்டு, சமீபத்திய உத்தரவின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். அதேபோல், மதவாத கொலை வழக்குகளில் விடுதலை செய்யப்பட இருப்பவர்கள் கமல் என்கிற பூரி கமல் மற்றும் விஜயன் என்கிற விஸ்வநாதன்.
விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளின் விவரங்கள்:
இவர்களது மீது என்ன வழக்குகள்:
- அபு தாஹிர் மற்றும் குண்டு ஜாஹிர் ஆகியோர் ஆசிரியர் கிருஷ்ணசாமி கொலை வழக்கில் கோவையில் கடந்த 1997ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள்.
- உமாயில் பாபு மற்றும் ஹாகுல் ஹமீது ஆகியோர் 1991ம் ஆண்டு கோவையில் சிவா என்ற நபரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்.
- ஹாரூன் பாஷா என்ற நபர் தீகரம் கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 2002ம் ஆண்டு சுல்தான் மீரான் கொலை வழக்கில் பூரி கமலும், விஸ்வநாதனும் தொடர்புடையவர்கள்.
இப்படியாக 5 முஸ்லிம்கள் மற்றும் 2 இந்துகள் விடுதலை செய்யப்பட இருக்கின்றனர்.
விடுதலை செய்யப்படவுள்ள 12 கைதிகளில் 4 பேர் கடலூர் சிறையிலும், 6 பேர் கோவை மத்திய சிறையிலும், வேலூர் மற்றும் புழல் சிறையில் தலா ஒருவர் உள்ளனர்.
நீண்ட ஆண்டுகளாக கடலூர் சிறையில் உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல், கோயம்புத்தூர் சிறையில் உள்ள அபுதாஹீர், விஸ்வநாதன், பூரி கமல், ஹாரூன் பாஷா, சாகுல் ஹமீது, பாபு ஆகியோர் விடுதலை செய்யப்படவுள்ளனர். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன், புழல் சிறையில் இருந்து ஜாஹிர் ஆகியோர் விடுதலை செய்யப்பட இருக்கின்றனர்.
2021 செப்டம்பரில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யும் திட்டத்தை அரசு அறிவித்ததையடுத்து, 49 கைதிகளின் கோப்பு என்.ஆத்திநாதன் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

