தமிழ்நாட்டில் கிராமசபை போல நவம்பர் 1-ஆம் தேதி முதல் நகர மாநகர சபை கூட்டம்..!
பொது மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டம் போல் தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1ம் தேதி முதல் நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பொது மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டம் போல் தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல் நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
கிராம சபை கூட்டத்தை போல ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டம் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளிலும் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம் ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் நடை பெறுவது வழக்கம். இதே போல நகர்புற அமைப்புகளிலும் நடத்தபடவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், நகர்புற நிர்வாகத்தில் மக்கள் பணியினை விரிவுபடுத்தும் விதமாக வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைக்கப்படும் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதை தொடர்ந்து கடந்து ஜூன் மாதம் கமிட்டி, சபை அமைப்பதற்கான வழிகாட்டுதல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சூழல் நவம்பர் 1 ம் தேதி நகர்புற கூட்டங்களை நடத்த அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு நிறை மற்றும் குறை தகவலை தெரிவிக்க 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நகர் பகுதி வார்டுகளில் மக்கள் குறை கேட்கும் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பம்மல் 6-வது வார்டில் மக்கள் குறை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநகரசபை கூட்டத்தில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வார்டு குறை நிறைகளை கேட்டு அறியவுள்ளார்.