மேலும் அறிய

கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவை நிறுத்தம் ; போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு

நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு பேருந்து சேவை நிறுத்தம் :

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவு.  பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டம் கலவரத்தில் முடிந்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி முற்றுகை போராட்டம் 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது. அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத இயந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் நடக்கிறது.  

தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை நடைபெற்றது. 

நெய்வேலி என்.எல்.சி. நுழைவு வாயிலில் போராட்டம் 

நெய்வேலி என்.எல்.சி. நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பேசிய அன்புமணி, “300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு  விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி பொக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர்.இன்றைய போராட்டத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? நிலக்கரியை எரித்து மக்களின் உடல்நிலையை பாதிக்க காரணம் என்.எல்.சி தான். மூன்று தலைமுறைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நாளை தொடங்கப்பட்டால் ஒட்டுமொத்த மாவட்டமும் கூடி சாலை மறியல் போரட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார். 

போராட்டத்தில் பதற்றம்:

இந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்தனர். அவர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதாக கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். முன்னதாக முற்றுகை போராட்டம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அன்புமணி கைது செய்யப்பட்ட வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும் தண்ணீர் பாட்டில், கொடிக்கம்பம் உள்ளிட்டவை காவல்துறையினர் மேல் எறிந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 

வடக்கு மண்டல ஐஜி ஆய்வு 

என்.எல்.சி.-யில் பா.ம.க. தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதை அடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது. என்.எல்.சி. நுழைவுவாயிலில் வன்முறை நடத்த இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்து வருகிறார். வன்முறையில் காவலர்கள் சிலர் காயமடைந்த நிலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் அய்வு செய்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்

விழுப்புரம்,கள்ளகுறிச்சி,  திண்டிவனம், மரக்காணம்,  கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் சாலை மறியல் .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Embed widget