"பசித்தால் எடுத்துக்கொள்.. பணம் வேண்டாம்" - பெருந்தொற்று கால சேவையில் விளம்பரம் தேடாத மனிதம்..

‘பசித்தால் எடுத்துக் கொள். பணம் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன், தள்ளுவண்டியில் உணவு பொட்டங்கலங்கள், வாழைப்பழம், தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

’பசித்தால் எடுத்துக்கொள். பணம் வேண்டாம்’ என கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் உணவு பொட்டலங்களை வைத்து  ஏழை, எளிய மக்கள் பசியாற உதவிவரும் மனிதநேய செயல் பாராட்டைப்பெற்று வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்க இன்று முதல் 14 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பல்வேறு தரப்பினரும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். முதல் ஊரடங்கின் போது தன்னார்வலர்களின் உதவி பலரின் பசியாற்றுவதில் பெரும் பங்காற்றியது. அப்பணிகள் தற்போது இரண்டாம் ஊரடங்கிலும் தொடர்கிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் முகம்காட்ட விரும்பாத ஒரு நபர் 100-க்கும் மேற்பட்டோரின் பசியாற்றி வருகிறார்.கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்திற்கு முன்பு கடந்த ஒரு வார காலமாக ஒரு தள்ளுவண்டி காணப்படுகிறது. தள்ளுவண்டியில் உணவு பொட்டங்கலங்கள், வாழைப்பழம், தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் ‘பசித்தால் எடுத்துக் கொள். பணம் வேண்டாம்’ என்ற வாசகங்களுடன், உதவ நினைத்தால் தொடர்புகொள்ள ஒரு செல்ஃபோன் எண்ணும் இடம்பெற்றுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தாமக வந்து தமக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்கின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது இரவு உணவும் வைக்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்து தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தனர். இதையடுத்து கச்சேரிமேடு பகுதியில் உள்ள கோபி தாலுக்கா அலுவலகம் முன்பும் ஒரு தள்ளுவண்டியில், இதேபோல உணவு பொட்டலங்கள், பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தள்ளுவண்டிகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் மற்றும் பழங்களை வைத்துச் செல்கின்றனர். அடையாளத்தை வெளிக்காட்டமல் விளம்பரம் இன்றி பலரின் பசியாற்ற உதவும் மனிதநேயச் செயல் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.
இதுதொடர்பாக அந்த பேனரில் இருந்த எண்ணை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், “நான் தனியார் பள்ளி முதல்வராக இருந்த நான், தற்போது ஒரு செல்ஃபோன் கடைவைத்து நடத்தி வருகிறேன். கடந்த ஒரு வார காலமாக தள்ளுவண்டியில் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பழம், பிஸ்கட் ஆகியவற்றை வைத்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு தள்ளுவண்டியில் நூறு வீதம் 200 உணவு பொட்டலங்கள் வைத்து வருகிறேன். உணவு வேண்டுவோர் அவற்றை வந்து எடுத்துக்கொள்ளலாம். கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்பதற்காக ஏழை, எளிய மக்கள் பசியாற என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன்” எனத் தெரிவித்தார்.

Tags: Corona Virus lockdown help Gobichettipalayam gobi service

தொடர்புடைய செய்திகள்

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு