Kamal at Chicago: சிகாகோவால் சிக்கிய கமல்... தடுப்பூசி டூ கொரோனா... அகம் டிவி வழியே அகத்துக்குள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், அங்கு வந்திருந்தவர்களிடம் செல்ஃபி எடுத்து கொண்டாரா அல்லது கை குலுக்கினாரா என்பது தெரியவில்லை.
அரசியல், சினிமா, சின்னத்திரை என எப்போதுமே தன்னை பிஸியாக வைத்திருப்பவர் கமல் ஹாசன். விக்ரம் பட படப்பிடிப்பு, பிக் பாஸ் படப்பிடிப்பு, அரசியல் கட்சி கூட்டங்கள் என தொடர்ந்து ஆக்டீவாக இயங்கி வந்தவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தன்னை மருத்துவனையில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிகாகோ பயணத்தை அடுத்து பிக் பாஸ் படப்பிடிப்பு:
சமீபத்தில் அமெரிக்கா பயணம் செய்திருந்த கமல், ‘கே.எச் ஹவுஸ் ஆஃப் காதி’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்துவதற்காக சிகாகோ சென்றிருக்கிறார் அவர். நமது கைத்தறி நெசவாளர்களின் திறமையையும் வணிகத்தையும் பரப்புவதற்காக சிகாகோ சென்றிருந்ததாகவும், அவர்களின் கைத்திறமையை உலகச்சந்தையில் எடுத்துரைப்பதற்கான முயற்சி இது என்றும் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் எபிசோடில் பேசினார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
அதனை தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பிக் பாஸ் படப்பிடிக்கு சென்றார் என தகவல் தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், “வெளியூர் சென்றிருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் வர மாட்டேன் என சில தெரிவித்திருந்தார்கள். ஆனால், நான் கடமை தவற மாட்டேன். இதுதான் என்னுடைய வீடு, இங்கு வராமல் எப்படி இருப்பேன்.” என பேசினார்.
பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியை சூட் செய்து கொடுத்துள்ளார். இந்த எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர், கமலிடம் உரையாடி வாழ்த்து பெற்று கொண்டார். இந்த பிக் பாஸ் எபிசோடில் பார்வையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, பிரபல நடிகர் நடிககைகளை சந்திக்கும்போது பொது மக்கள் அவர்களிடம் செல்ஃபி எடுத்து கொள்வது வழக்கம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், அங்கு வந்திருந்தவர்களிடம் செல்ஃபி எடுத்து கொண்டாரா அல்லது கை குலுக்கினாரா என்பது தெரியவில்லை. அப்படி இருந்தால், அவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
தடுப்பூசி செலுத்தி கொண்ட கமல்:
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். pic.twitter.com/SmZEUr4qqT
— Kamal Haasan (@ikamalhaasan) March 2, 2021
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி கமல் தனது முதல் தவணை கோவிட் தடுப்பூசியை எடுத்து கொண்டார். சென்னை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்து கொண்ட அவர், மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். 67 வயதான கமல், இரண்டாவது தடுப்பூசியையும் செலுத்தி கொண்டிருக்கிறார். இரு தவணைகளையும் சரியாக எடுத்து கொண்ட கமலலுக்கு இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவர் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் விக்ரம் பட சூட்டிங்கின்போது, அவருக்கு பிறந்தநாள் வந்ததையொட்டு, படக்குழுவினர் விமர்சியாக கமலின் பிறந்தநாளை கொண்டாடினர். கடைசியாக, படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்ததையொட்டி, இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடியவில்லை. கொரோனா சிகிச்சை முடிந்தபிறகுதான் விக்ரம் பட சூட்டிங், பிக் பாஸ் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ள முடியும். இதனால், இந்த வார இறுதி எபிசோடில் கமலுக்கு பதில் வேறு யாராவது தொகுத்து வழங்குவார்களா அல்லது ஆன்லைன் வீடியோ எபிசோடாக இருக்குமா என்பதை பிக் பாஸ் குழு திட்டமிட்டு முடிவெடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்