Gayathri Raghuram Suspend : "பாஜகவில் ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதியா?" - காயத்ரி ரகுராமை வைத்து கேள்வி கேட்கும் மநீம...!
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”விசாரணை நடத்தாதது ஏன்?”
இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சு.ஆ. பொன்னுசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ” பாஜக பெண் நிர்வாகி தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன்.? என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக "பாஜக பெண் நிர்வாகி தகாத வார்த்தைகளால்
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) November 23, 2022
மிரட்டப்பட்ட விவகாரம், தேசிய மகளிர் ஆணையம்
தானாக முன் வந்து விசாரணை நடத்தாதது ஏன்..?" பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாதது ஏன்..? #MNMLabourWing #NTSP #TNMilkAssociation @NCWIndia @ikamalhaasan @BJP4TamilNadu @BJP4India pic.twitter.com/pBOAbfT3JZ
மேலும் உள்கட்சி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பேசிய தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சி விரோத செயல்பாடுகளுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதுவே சிறுபான்மையினர் அணி தலைவியான மருத்துவர் திருமதி. டெய்சி சரண் அவர்கள் தொலைபேசியில் பேசிய போது அச்சிலேற்ற முடியாத, தகாத வார்த்தைகளால், தரம் தாழ்ந்து சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்தோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் அணி பொதுச் செயலாளர் சூர்யா சிவா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவர் மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் (7நாட்கள்) வரை கட்சி நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்க தடை விதித்துள்ளது என மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
"ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதியா?"
ஏனெனில் உள்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதற்காக ஒரு பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய மாநில கட்சித் தலைமை சக பெண் நிர்வாகியை தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து சமூக விரோதி போல கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்காமல் ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் வெறும் நாட்களுக்கு மட்டும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பெண்கள் என்றால் ஒரு நீதியும் ஆண்கள் என்றால் ஒரு நீதியும் என்கிற அடிப்படையில் ஆணாதிக்க சிந்தனையோடு தமிழக பாஜக செயல்பட்டு வருவதையும், தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
”கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளின் பாதுகாப்பையே கட்சியின் தலைமையால் உறுதி செய்ய முடியாத போது தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழக பெண்களுக்கு பாஜக எந்த வகையில் பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்..? மேலும் எது, எதற்கெல்லாமோ பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியான உடன் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும் "தேசிய மகளிர் ஆணையம்", மருத்துவரும், தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவியுமான திருமதி. டெய்சி சரண் அவர்கள் தகாத வார்த்தைகளால் மிரட்டப்பட்ட விவகாரத்தில் இதுவரை தானாக முன் வந்து விசாரணை நடத்த முன் வராதது ஏன்.? ஒருவேளை மேலே ஆட்சி புரிபவர்களின் கடைக்கண் பார்வை (அனுமதி) கிடைத்தால் தான் மகளிர் ஆணையம் கூட செயல்படுமோ.? என்னவோ..?” என தெரிவித்துள்ளார்.