பணி நிரவல் மாற்றத்தில் இருந்து மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு - அரசு அறிவிப்பு
பணி நிரவல் மாற்றத்தில் இருந்து( excess staff teachers transfer) மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணி நிரவல் மாற்றத்தில் இருந்து( excess staff teachers transfer) மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு:
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட தனிப்பட்ட லாகின் ஐடியைப் பயன்படுத்தி மாறுதல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
மாறுதலுக்கு விண்ணப்பித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதலினைப் பெற்ற பின்னரே அப்ரூவல் செய்ய வேண்டும்.
மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலைப் பெறு நகலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அரசு அறிவுறுத்தலின்படி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை வழங்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு அந்தந்த நாள் கலந்தாய்வு அன்று கலந்தாய்வின் முதலில் முன்னுரிமை அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் விருப்பம் தெரிவிக்கும் பள்ளிக்கு மாறுதல் அளிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கணவன்/மனைவியை இழந்த ஆசிரியர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் இல்லை.
உபரி ஆசிரியர்களாக கண்டறியப்பட்ட முதுகலை, பட்டதாரி ஆசிரியர்களில் உள்ள அனைத்து வகை மாற்று திறனாளிகளுக்கும் பணிநிரவல் கலந்தாய்வில் விலக்களிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அதே பள்ளியில் அடுத்த இளையவரை பணிநிரவலுக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிநிரவலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியிருந்தனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் அரசாணை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த அரசாணை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணி நிரவல் மாற்றத்தில் இருந்து( excess staff teachers transfer) மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.