மேலும் அறிய

கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

கரூர் அருகே  தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்து சென்ற தகராறு பேருந்து நிறுத்தத்தில் நடந்த தகராறை வேடிக்கை பார்த்த பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு 3 பேர் கைது.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் மணிகண்டன் (19). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கையும் ராஜபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தோழிகள். இந்த நிலையில் நஞ்சைகாளிக்குறிச்சியில் கடந்த வாரம் திருவிழா நடந்துள்ளது.  இந்த திருவிழாவிற்கு ராஜபுரத்தை சேர்த்த மணிகண்டன் தங்கையின் தோழி வந்துள்ளார். திருவிழா முடிந்ததும் அந்த பெண்ணை மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ரவி என்பவரது மகன் மதன் (26), செந்தில்குமார் மகன் அபிஷேக் ( 19), கோவிந்தராஜ் மகன் தமிழரசன் ( 19) ஆகிய மூவரும் மணிகண்டனை எங்கள் ஊர் பெண்ணை எப்படி கூட்டிக் கொண்டு வரலாம் என எச்சரித்துள்ளனர். 

கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

பதிலுக்கு மணிகண்டனும் எச்சரித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் ராஜபுரத்தைச் சேர்ந்த மதன் தனது செல்போனில் தொடர்புகொண்டு மணிகண்டனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் தனது நண்பன் சின்னதாராபுரம் தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சூர்யாவிடம் (19) நடந்த விவரத்தை கூறியுள்ளார். 

கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

இதனையடுத்து சூர்யா தனது செல்போனில் ராஜபுரத்தை சேர்ந்த நபர்களிடம் பேசியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது செல்போனில் தொடர்பு கொண்டு ராஜபுரத்தை சேர்ந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ராஜபுரத்தை சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் உருட்டுக்கட்டையுடன் சின்னதாரபுரத்தை நோக்கி வந்தனர். சின்னதாராபுரம் பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்த சூரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் சூர்யா துடித்துள்ளார். 

கரூர்: தங்கையின் தோழியை பைக்கில் ஏற்றிச்சென்ற நண்பன்! வாண்ட்டடாக உதவிக்கு வந்த நபர் கொலை!

பக்கத்திலிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் அரவிந்த் (28) சம்பவத்தை தடுத்துள்ளார். அரவிந்த் முதுகலை இன்ஜினியரிங்  படித்துள்ளார். இந்த சமயத்தில் சூர்யா ஓடி ஒளிந்து உள்ளார். மதன், அபிஷேக், தமிழரசன் ஆகிய 3 பேரும் அரவிந்தை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். வலியால் துடித்த அரவிந்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 

இது போல் சிகிச்சைக்காக சூர்யாவையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அரவிந்த் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சின்ன தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை? - மின் வாரியம் லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை? - மின் வாரியம் லிஸ்ட் இதோ
TN Weather Update: அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டாவில் சம்பவம் இருக்கு.. டெல்டா வெதர்மேன்!
TN Weather Update: அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டாவில் சம்பவம் இருக்கு.. டெல்டா வெதர்மேன்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை கொடுத்த எச்சரிக்கை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை கொடுத்த எச்சரிக்கை

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Embed widget