அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு - ம.நீ.ம தலைவர் கமல் குற்றச்சாட்டு
வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை
வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறினார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கண்டைனர்கள் அடிக்கடி வந்துசெல்வது உள்பட பல்வேறு விதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று அவர் கூறினார்.
ஏற்கனவே 30 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை. வாக்களிப்பதிலும், வாக்கு எண்ணிக்கையும் இதுபோன்ற மர்மம், பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைக்கும் என்றும். மேலும் இந்த நிகழ்வு குறித்து மக்கள் நீதி மய்யம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில் 'தமிழ்நாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் ரூம்' முழுமையாக பாதுகாத்திட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. ஈ.வி.எம் மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்டிராங் ரூம்' உட்பகுதி அனைத்தும் தெளிவாக தெரியும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஈ.வி.எம் மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும் 'ஸ்டிராங் ரூம்' பின் பகுதி உள்ளிட்ட நாற்புறமும் கண்காணிக்கப்படும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நீதி மய்யம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில். 'கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்தில் கட்சியின் முகவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்தது போன்ற சுகாதாரமற்ற முறையை கடைபிடிக்காமல், தற்போதுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் வாக்கு எணிக்கையின்போது விவிபாட் எண்ணிக்கையையும் உயிர் பிழை நீக்கி 100 சதவீத ஒப்புநோக்கி முடிவுகளை அறிவிக்க வேண்டும். விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை கண்காணித்து விதிமீறல் நடப்பதை தவிர்க்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் பாதுகாப்பு அறையில் நடந்த சில விதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகரிக்கு அனுப்பிய கடிதத்தில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிட்டுள்ளது. 13.04.2021 அன்று நள்ளிரவில் கோயம்பத்தூர் ஐசிடி கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் திடீரென மூடப்பட்ட வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.16.04.2021 அன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் சந்தேகப்படும்படி லாரி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் உள்ள பாதுகாப்பு வளாகத்திற்குள் மடிக்கணினியுடன் 31 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று பல விதி மீறல்கள் அந்த கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.