MK Stalin Birthday: ஒரு வருடத்திலேயே முதலலைமைச்சர் ஸ்டாலின் செய்த சாதனை இது! - அகிலேஷ் யாதவ் புகழாரம்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஒரு வருடத்திலேயே முதலலைமைச்சர் ஸ்டாலின் செய்த சாதனை அளப்பரியது என்று அகிலேஷ் யாதவ் புகழாரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் அணியை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1976ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் ஸ்டாலின். பதவியேற்ற ஒரு வருடத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்இனைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் உள்ளவர்ஸ்டாலின். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டு உடனக்குடன் தீர்வு காண்கிறார்” எனப் பேசினார்.
அகிலேஷ் யாதவ் உரையின் விவரம் :
அகிலேஷ் யாதர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். மு.க.ஸ்டாலின் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக சிறப்பாக செயலாற்றி வருகிறார். மெட்ராஸ் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க கால கல்வியை முடித்தவர், பிரெசிடன்சி கல்லூரியில் வரலாற்று துறையில் பட்டம் பெற்றார்.ஸ்டாலின், அவருடைய தந்தையை போலவே நாத்திகவாதி என்று தன்னை சொல்லிக்கொண்டாலும், அவர் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர் இல்லை என்றும் அவர் தெளிப்படுத்தியிருக்கிறார்.
14- வயதில் கோபாலப்புரத்தில் இளைஞர் அணியை தொடங்கியவரின் அரசியல் பயணத்தின் வளர்ச்சி அளப்பரியது. 1967 தேர்தலில் பரப்புரை செய்தார் ஸ்டாலின். 1973 ஆண்டு தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக சென்னை மேயரா தேர்வு செய்யப்பட்டார்.
’சிங்கார சென்னை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி நகரின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை செயல்படுத்தினார். நாட்டில் அவரச நிலைச் சட்டம் நிகழ்ந்த சூழலில் 1976-ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார்.