முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பதில் அளிக்க நோட்டீஸ்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அப்போது அருகில் உள்ள கோவில் நிலத்தை அபகரித்ததாக நில அபகரிப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையில் மு.க.அழகிரி மீதான சில பிரிவுகள் அவருக்கு பொருந்தாது எனக்கூறி அவரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கப்பட்ட அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மேல் முறையீடு மீதான விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மு.க.அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.