Venkatachalam Suicide: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
சோதனையில் பணம் ரூபாய் 13.5 லட்சம், சுமார் 6.5 கிலோ தங்கம் (தோராயமாக சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு) மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறிப்பட்டது
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை கொண்டார்.
#JustIn
— Manoj Prabakar S (@imanojprabakar) December 2, 2021
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை
கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது
6.5கிலோ தங்கம், 13.5லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருந்தது
முன்னதாக, குற்றம் மற்றும் ஊழல் முறைகேடு சம்மந்தமாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஏ.வி.வெங்கடாசலம் மீது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
#BREAKING | சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை https://t.co/wupaoCQKa2 | #DAVC | #Raid | #TNGovt | #TNPCB pic.twitter.com/d3PEEAlcxO
— ABP Nadu (@abpnadu) September 23, 2021
இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் பணம் ரூபாய் 13.5 லட்சம், சுமார் 6.5 கிலோ தங்கம் (தோராயமாக சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு) மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறிப்பட்டது. மேலும் பணம் ரூபாய் 13.5 லட்சம் மற்றும் இவ்வழக்கிற்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இவர்வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், கண்டறியப்பட்டு, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்