மேலும் அறிய

DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?

துரைமுருகன் தனது பொதுச்செயலாளர் பதவியை விட்டுத்தர மறுப்பதால் மு.க.ஸ்டாலின் தர்மசங்கடமான சூழலில் உள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-வின் தோல்வி அந்த கட்சியினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. ஆட்சியை எளிதாக கைப்பற்றிவிடுவோம் என்று எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினே படுதோல்வி அடைந்தார். 

திமுக படுதோல்வி:

திமுக-வின் படுதோல்விக்கு காரணம் என்னவென்று தீவிரமாக மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதில் கட்சியின் மூத்த தலைவர்களின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, கட்சியின் எதிர்காலம் கருதி கட்சியின் முக்கிய பதவிகளுக்கு இளம் நிர்வாகிகளையும், அடுத்த கட்ட தலைவர்களையும் கொண்டு வர முடிவு செய்துள்ளார். 

பதவி விலக மறுக்கும் துரைமுருகன்:

கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமுருகன் தொடர்ந்து திமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அவரது கட்சிப் பதவியையும் டி.ஆர்.பாலுவிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஆனால், துரைமுருகனோ தான் பதவியில் இருந்து விலக இயலாது என்பதில் திட்டவட்டமாக உள்ளார். 

மேலும், இதுதொடர்பாக தன்னை அணுகும் திமுக மூத்த நிர்வாகிகளிடமும் மறைந்த பொதுச்செயலாளர் அன்பழகன் உயிரிழக்கும் வரை அதே பதவியில் இருந்தார். அவரை யாரும் பதவி விலக வலியுறுத்தவில்லை. தானும் பதவி விலக மாட்டேன் என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதேசமயம், திமுக தலைமை வழக்கமாக தனது அறிக்கைகளை பொதுச்செயலாளர் பெயரிலே வெளியிடும். ஆனால், சட்டசபை கூட்டத்திற்கு முன்பு வெளியான திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு பொதுச்செயலாளர் துரைமுருகனின் அழைப்பிற்கு பதிலாக சட்டசபை திமுக கொறடா எவ வேலு-வின் பெயரில் வந்தது.

என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்?

வயது மூப்பு, உட்கட்சியில் எழும் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துரைமுருகனுக்கு தொடர்ந்து எதிர்ப்பும் கட்சியிலே எழுந்து வருகிறது. அவரை தலைமை ஓரங்கட்டி வந்தாலும் அவர் தனது பொதுச்செயலாளர் பதவியை விட்டுத்தரமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். இந்த சூழலில், திமுக-வின் எதிர்காலம் கருதி மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை மாற்றத்தை கொண்டு வர கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனால், துரைமுருகனை ஓரங்கட்டி வந்தாலும் அவரது பொதுச்செயலாளர் பதவியை வேறு ஒருவரிடம் மு.க.ஸ்டாலின் ஒப்படைப்பாரா? அல்லது அவரே அதே பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி மு.க.ஸ்டாலின் முன் வலுவாக எழுந்துள்ளது. 

முதல்வரானப் பின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விஜய்..வருத்தத்தில் ரசிகர்கள்..ஏன் தெரியுமா?

Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Embed widget