மேலும் அறிய

Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு

Honda QC3 Scooter Vs Rivals Electric Scooter: ஹோண்டா புதியதாக சந்தைப்படுத்தியுள்ள QC3 மின்சார ஸ்கூட்டர் தனது போட்டியாளர்களை விட எப்படி சிறந்ததாக உள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Honda QC3 Scooter Vs Rivals Electric Scooter: ஹோண்டாவின் QC3 மின்சார ஸ்கூட்டரானது உள்ளூர் சந்தையில், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக் , ஏதர் ரிஸ்டா மற்றும் ஓலா எஸ்1எக்ஸ் ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.

ஹோண்டா QC3 Vs போட்டி மின்சார ஸ்கூட்டர்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா நிறுவனமானது அண்மையில் தனது QC3 மின்சார ஸ்கூட்டர் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை வரம்பானது ரூ.1.20 லட்சம் தொடங்கி ரூ.1.30 லட்சம் வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 146 கிலோ மீட்டர் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.  உள்ளூர் சந்தையில், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக் , ஏதர் ரிஸ்டா மற்றும் ஓலா எஸ்1எக்ஸ் ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. அந்த வகையில் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் QC3 மின்சார ஸ்கூட்டரின் விலை, பேட்டரி, ரேஞ்ச் மற்றும் அம்சங்கள் எப்படி உள்ளன என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹோண்டா QC3 Vs போட்டி ஸ்கூட்டர் மாடல்கள்:

மாடல் தொடக்க விலை விவரங்கள் பேட்டரி

அறிவிக்கப்பட்டுள்ள

ரேஞ்ச் (IDC)

சார்ஜிங் முக்கிய அம்சங்கள்
ஹோண்டா QC3 சுமார் ரூ.1.2 லட்சம் (எதிர்பார்ப்பு) 3.0 KWh 145 kM 0-80% - 2.40 மணி நேரம் 5 இன்ச் TFT, ஹோண்டா ரோட் சிங்க், நேவிகேஷன், கீலெஸ், 32 இட்டர் ஸ்டோரேஜ்
ஹோண்டா QC1 ரூ. 90,708 1.5 KWh 80 kM ஸ்டேடர்ட் சார்ஜிங் அடிப்படையான பயணிகள் மின்சார வாகனம்
டிவிஎஸ் ஐக்யூப் 3.1 சுமார் ரூ.1.05 - ரூ.1.10 லட்சம் 3.1 KWh சுமார் 123 kM வேரியண்ட் அடிப்படையில் ஸ்டேண்டர்ட்/பாஸ்ட் ஸ்மார்டெக்ஸ் கனெக்ட், TFT, பெரிய ஸ்டோரேஜ்
பஜாஜ் சேடக் 3001 சுமார் ரூ.1 லட்சம் 3.0 KWh சுமார் 127 kM ஸ்டேண்டர்ட் மெடல் பாடி, ப்ரீமியம் பில்ட்
ஏதர் ரிஸ்டா S சுமார் ரூ.1.20 லட்சம் 2.9 KWh சுமார் 123 kM ஃபாஸ்ட் சார்ஜிங்  சப்போர்ட் கூகுள் மேப், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல்
Ola S1X+ (5.2kWh) சுமார் ரூ.1.30 லட்சம் 5.2 KWh சுமார் 242 kM ஃபாஸ்ட் சார்ஜிங்  பெரிய டச்ஸ்க்ரீன், மூவ்OS

ஹோண்டா QC3 போட்டியாளர்களை வீழ்த்துமா?

  • டிவிஎஸ் ஐக்யூப் 3.1 மாடலுடன் ஒப்பிட்டால் அதிகப்படியான ரேஞ்ச், வேகமான சார்ஜிங் மற்றும் பெரிய ஸ்டோரேஜ் வசதியும் QC3 சிறந்ததாக திகழ்கிறது. ஆனால், நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை, விரிவான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவற்றில் பின் தங்குகிறது
  • பஜாஜ் சேடக் உடன் ஒப்பிட்டால் அதிகப்படியான ரேஞ்ச், கூடுதலான நவீன கனெக்டட் அம்சங்கள் மூலம் QC3 முன்னிலை பெறுகிறது. அதேநேரம், முற்றிலும் உலோகத்தாலான ப்ரீமியம் கட்டமைப்பு மற்று தரமான பயண அனுபவத்தில் பின் தங்குகிறது
  • ஏதர் ரிஸ்டா மாடலுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியா ரேஞ்ச் வாயிலாக QC3 ஸ்கூட்டரின் கை ஓங்குகிறது. அதேநேரம், அதிக செயல்திறன் சார்ந்த சாஃப்ட்வேர், வலுவான ரைடிங் கட்டமைப்பில் பின் தங்குகிறது 
  • Ola S1X+ மாடலுடன் ஒப்பிடுகையில் ஹோண்டாவின் நம்பகத்தன்மை மற்றும் விற்பனைக்கு பிறகான வலுவான சேவை அமைப்பு QC3-க்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. ஆனால், பெரிய பேட்டரி, அதிகப்படியான ரேஞ்ச், கூடுதல் சக்தி கொண்ட செயல்திறன் ஆகியவற்றில் ஓலா கை ஓங்குகிறது.

இதையும் படியுங்கள்: Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?

ஹோண்டா QC3 சாதகங்கள்

  • ஹோண்டாவின் தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக தூரம் செல்லும் திறன் கொண்டது.
  • பயன்பாட்டிற்கு ஏற்ற, குடும்பத்திற்கு உகந்த வடிவமைப்பு
  • விரைவான சார்ஜிங் (4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்)
  • 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பூட் ஸ்பேஸ்
  • ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் கூடிய TFT டிஸ்ப்ளே.

ஹோண்டா QC3 பாதகங்கள்

  • அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை
  • மோட்டாரின் திறன் மற்றும் அதிகபட்ச வேகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை
  • நடைமுறைப் பயன்பாட்டில் இதன் பயண வரம்பு (range) குறித்து இன்னும் பயனர்களால் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை
  • நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே இது கிடைக்கப்பெறலாம்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Long Trip Cars: ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?
ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget