மேலும் அறிய

Fact Check: போலியை நிறுத்துங்கள்... தமிழக அலங்கார ஊர்தி விவகாரம்: இணையத்தில் பரவிய இமேஜ்; பாஜகவை சாடிய கார்த்தி சிதம்பரம்

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு ‘இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.

இந்திய குடியரசு தின அலங்கார அணிவகுப்பில், தமிழகத்தின்  சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை மத்திய அரசின் தேர்வுக் குழு நிராகரித்துள்ளது. இதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், "இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்காண வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சர்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

போட்டோஷாப் படம்:

இந்தச் சூழலில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக ஒரு செய்தி பரவியது.

அந்தச் செய்தியில், "குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு சார்பாக அனுப்பப்பட்ட வாகனத்தில் கருணாநிதி மற்றும் அவரின் இணைவியார் ராசத்தியம்மாள் சிலை வைக்கப்பட்டதால் தமிழக அலக்கார வாகனம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வந்துள்ளது. இதனை திமுக அரசு தவிர்த்திருக்கலாம் காங்கிரஸ்" என கார்த்தி சிதம்பரம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்த புகைப்படத்தில், இதற்காகத் தான் தமிழக வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது நன்றி பிரதமரே என்று குறிப்பிட்ட போட்டோஷாப் செய்யப்பட்ட வாகனமும் இடம்பெற்றிருந்தது.

Fact Check: போலியை நிறுத்துங்கள்... தமிழக அலங்கார ஊர்தி விவகாரம்: இணையத்தில் பரவிய இமேஜ்;  பாஜகவை சாடிய கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் மறுப்பு:

அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கார்த்தி சிதம்பரம் தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்தவும் எனக் கூறி அதில் தமிழக பாஜகவையும் டேக் செய்துள்ளார்.

இதனையடுத்து இணையத்தில் பாரதியாரின் பின்னால் மஞ்சள் நிற சட்டையுடன் கருணாநிதியும் அருகில் அவரது துணைவியார் ராசாத்தி அம்மாளும் இருப்பது போன்ற புகைப்படம் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சில நெட்டிசன்கள், இதைக்கூட போட்டோஷாப் செய்வதால் தான் பாஜகவை தமிழக மக்கள் நிராகரிக்கின்றனர் எனப் பதிவு செய்து உண்மையான தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!

Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!

Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!

Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்

 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!

4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி

Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget