ExMinister Saroja: பண மோசடி புகார்: நாமக்கல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா சரண்
சத்துணவு திட்டத்திற்கான முட்டை மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்குவதற்கு டெண்டர்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சிகாலத்திலேயே முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்கள் எழுந்தது.
சத்துணவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் இவர் முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் சரோஜாவிற்கு உதவியாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா அமைச்சராக இருந்தபோது சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதற்காக 18 பேரிடம் தான் 75 லட்சம் பணம் வசூல் செய்து அவரிடம் கொடுத்ததாகவும், ஆனால் இதுவரை அவர் பணியும் வழங்கவில்லை, கொடுத்த பணத்தை திரும்பவும் தரவில்லை எனவும், தான் மற்றவர்களிடம் வசூல் செய்து கொடுத்த 75 லட்சம் ரூபாய் பணத்தை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி செய்துவிட்டதாகவும், அந்த பணத்தை திரும்ப பெற்று தரவும் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் சரோஜா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
#BREAKING | பணமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்
— ABP Nadu (@abpnadu) April 20, 2022
சத்துணவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக வழக்குhttps://t.co/wupaoCQKa2 | #AIADMK #Rasipuram pic.twitter.com/0W7yWMGWmw
புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவினர் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில்வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில் சரோஜாவும், அவரது கணவரும் தலைமறைவானதாக தெரிகிறது. இந்நிலையில் பண மோசடி வழக்கில் இன்று சரணடைந்திருக்கிறார் சரோஜா.
சமூக நலத்துறையின் கீழ் வரும் சத்துணவு அமைப்பாளர் பொறுப்புகளை பணம் பெற்றுக்கொண்டு ஆட்களை நியமித்ததாகவும், சத்துணவு திட்டத்திற்கான முட்டை மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்குவதற்கு டெண்டர்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாகவும் அதிமுக ஆட்சிகாலத்திலேயே முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
பிற முக்கியச் செய்திகள்:
ஆளுநர் கான்வாய் மீது கல்வீச்சு நடந்ததா? அறிக்கை வெளியிட்ட காவல்துறை.. https://t.co/wupaoCQKa2 | #Governor #RNRavi #TNPolice #Mayilladudurai #tamilnadu pic.twitter.com/7mHYdq6rfJ
— ABP Nadu (@abpnadu) April 20, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்