Erode East Bypoll: தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை: ஈரோட்டில் பரபரப்பு.. விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர்..!
Erode East Bypoll 2023 Result: முதல் சுற்று முடிந்து ஒரு மணிநேரம் ஆக உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ வாக்கு நிலவரம் தரவில்லை என செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் சுற்று முடிந்து ஒரு மணிநேரம் ஆக உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ வாக்கு நிலவரம் தரவில்லை என செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விளக்கமளித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, “அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும். தேர்தல் ஆணைய உத்தரவு காரணமாக செய்தியாளர்களை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கவில்லை. முதல் சுற்று முடிவுகள் குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் அறிவிக்க வேண்டும் என கட்டாயமில்லை. ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்படும். வெளிப்படைத்தன்மையுடனே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

