மேலும் அறிய

திமுக பிரமுகரிடம் 70 கோடி ஆவணங்களை அள்ளிச்சென்ற அமலாக்கத்துறை... அதிர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக...!

ராமேஸ்வரத்தில் திமுக மாவட்ட மீனவர் அணி செயலாலர் வில்லாயுதம் வீட்டில் நடத்திய சோதனையில், 70 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோயில் பகுதிதைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் வில்லாயுதம், திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்து, இலங்கைக்குக் கடத்த முற்பட்டதாகக் கடலோர காவல்படையினரால் துறையினரால் வில்லாயுதம் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் சிறையில் இவர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நிலை பாதிப்பு காரணமாக இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக பிரமுகரிடம் 70 கோடி ஆவணங்களை அள்ளிச்சென்ற அமலாக்கத்துறை... அதிர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக...!

திமுக மாவட்ட மீனவர் அணி செயலாளரான வில்லாயுதம் முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் மதுரை அமலாக்கத் துறையினருக்கு ரகசியமாக புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த தகவலையடுத்து  நேற்று  காலை 7 மணி முதல் இரவு வரை வேர்கோடு பகுதியில் உள்ள வில்லாயுதம்  வீட்டிற்கு  அமலாக்கத்துறையின் உதவி இயக்குனர் தலைமையில் வந்த  18 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வில்லாயுதத்தின்  வீடு,  தங்கும் விடுதி,  மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். 

திமுக பிரமுகரிடம் 70 கோடி ஆவணங்களை அள்ளிச்சென்ற அமலாக்கத்துறை... அதிர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட திமுக...!

காலையில் இருந்து சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வில்லாயுதத்தின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்களிடமும் அவர்கள் வைத்திருக்கும் வங்கிக்கணக்குகள், வங்கி பரிவர்தனைகள், புதிதாக வாங்கிய சொத்து ஆவணங்கள் குறித்து சோதனை  நடந்தது. ஆவணங்கள் குறித்த விவரங்களை வில்லாயுதம் மற்றும் அவரின் குடும்பத்தினரிடமும் அமலாகத்துறை அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். இந்த சோதனையின் முடிவில் வில்லாயுதத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து 70 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்கும் போது,  வில்லாயுதத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல்  செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்திய பின்புதான் சொத்துக்களின் மதிப்பை வெளியிடப்படும் எனவும், எங்களுக்கு கிடைத்த தகவலில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம், இன்றோடு ரெய்டு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது எனவும் தெரிவித்தனர். அமலாக்கத்துறை எடுத்து சென்றுள்ள ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விரைவில் அமலாகத்துறை சார்பில் விலாயுத்ததிற்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பபடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏப்பா, யாரைக் கேட்டாலும் அவரும் அவரு மீன் யாவாரம் தான பார்த்தாரு திமுகவில் இருக்காரு, அதுக்காக இவ்வளவு சொத்தா சேர்த்திருப்பாரு அப்படின்னு உள்ளூர் மக்கள் பேசிக்கிறாங்க..!

மாவட்ட மீனவரணி செயலாளராக உள்ள திமுக பிரமுகரின் வீட்டில் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பது ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget