மருத்துவர் ராமதாஸ் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மின்சாரம் தடை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மின்சாரம் தடை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் நாள்தோறும் ஒரு இடங்களில் மின்சாரம் பராமரிப்பு பணிக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை மின்சாரம் நிறுத்தம் ஏற்பட்டு அப்பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது காற்றடிக்காலம் என்பதால் காற்றில் மரம், செடி உள்ளிட்ட கிளைகள் மின்கம்பியில் படும்போது பாதிப்பு ஏற்பட்டு மின்தடை ஏற்படுகிறது. எனவும் ,அணில் உள்ளிட்ட பறவைகளின் செயலால் மின்தடை ஏற்படுகிறது. எனவும் ,தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் v. செந்தில் பாலாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதனடிப்படையில் சமூகவலைதளங்களில் அணில் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது பதிவுகளை நகைச்சுவையாக பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் நேற்று மின்தடை குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் v.செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் புகைப்படங்களுடன் விளக்கம் அளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நாள்தோறும் மின் தடை தற்போது அமலில் உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை மின் பராமரிப்பு பணிக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்பட உள்ளதாக கரூர் மின்வாரிய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பவித்ரம், ஈஸ்வரன் கோயில், ராமகிருஷ்ணாபுரம், லைட் ஹவுஸ் கார்ன,ர் ஜெகதாபி, பெரிய காளிபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுப்பட்டி, வளையப்பட்டி ,வல்வரமங்கலம் , பூஞ்சோலை பட்டி, டெக்ஸ் பார்க், V.N. கூடலூர், கட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 09 மணி முதல் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளாக அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களது பணிகளை சிரமமின்றி முடித்துக்கொள்ள வேண்டும். எனவும், நாள்தோறும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை இல்லத்தரசிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.