மேலும் அறிய

அடிகளார் மனைவிக்கு பூங்கொடுத்து கொடுத்த தேர்தல் அலுவலர்... சர்ச்சையில் ஊராட்சி தலைவர் தேர்வு!

அறிவிப்பு சான்றிதழ் கொடுக்கச் சென்ற தேர்தல் அலுவலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி 22 ஆம் வரை நடைபெற்றது. 

அடிகளார் மனைவிக்கு பூங்கொடுத்து கொடுத்த தேர்தல் அலுவலர்... சர்ச்சையில் ஊராட்சி தலைவர் தேர்வு!
பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2  முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், போட்டியிட வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.
அடிகளார் மனைவிக்கு பூங்கொடுத்து கொடுத்த தேர்தல் அலுவலர்... சர்ச்சையில் ஊராட்சி தலைவர் தேர்வு!
 
இந்நிலையில் அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யதால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர் ஆனார் லட்சுமி . இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு சான்றிதழ் வழங்குவதற்காக  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரணிதரன் ,  மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று லஷ்மி பங்காரு அடிகளாரிடம் அறிவிப்பு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று பவ்வியமாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த சம்பவம்   சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடிகளார் மனைவிக்கு பூங்கொடுத்து கொடுத்த தேர்தல் அலுவலர்... சர்ச்சையில் ஊராட்சி தலைவர் தேர்வு!
 
சொத்து மதிப்பு குழப்பம்
 
முன்னதாக கடந்த 16 ஆம் தேதி பங்காரு அடிகளாரின் மனைவி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மொத்த சொத்து மதிப்பு அசையும் சொத்துக்கள் -  75,149,141 , அசையா சொத்துக்களின் மதிப்பு - 160,280,003 , இதன் கூட்டுத்தொகை 23,54,29,144 வருகிறது.  ஆனால் வேட்பு மனுவில் ,  அதற்கு பதிலாக 253,54,29,144 என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என பரவத்துவங்கியது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்து வந்தனர்.

அடிகளார் மனைவிக்கு பூங்கொடுத்து கொடுத்த தேர்தல் அலுவலர்... சர்ச்சையில் ஊராட்சி தலைவர் தேர்வு!
 
இதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி லஷ்மி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 95,495,146 அசையா சொத்துக்களின் மதிப்பு 160,280,003 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தனது சொத்து மதிப்பு 25,57,75,149 எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
மேல்மருவத்தூர்
 
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.
அடிகளார் மனைவிக்கு பூங்கொடுத்து கொடுத்த தேர்தல் அலுவலர்... சர்ச்சையில் ஊராட்சி தலைவர் தேர்வு!
 
இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது. இக்கோவிலை சுற்றி வட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம்.   அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோவிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
கைதின் பின்னணியில் அல்லு அர்ஜூனின் அரசியல் ஆசையா? அறிக்கை வந்ததும் ஆர்டர் போட்ட ரேவந்த் ரெட்டி?
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
“இஸ்லாமியர்களுக்கு துரோகம், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி” அதிமுகவை விளாசிய அமைச்சர் நாசர்..!
“இஸ்லாமியர்களுக்கு துரோகம், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி” அதிமுகவை விளாசிய அமைச்சர் நாசர்..!
Embed widget