அண்ணாமலை பேச்சுக்கு பின் கரூர் எஸ்.பி மாற்றம்! தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை!
அண்ணாமலை பேட்டியளித்த நிலையில் மாற்றப்பட்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இந்த நான்கு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்பியாக டி.என்.ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்பியாக டி.வி.கிரண் ஸ்ருதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் எஸ்பியாக சுஜித் குமார், விருதுநகர் எஸ்பியாக என்.ஸ்ரீநாதாவை நியமித்து தேர்தல் உத்தவிட்டுள்ளது.
#BREAKING | எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்!https://t.co/wupaoCzH82 | #SP #TNpolice #tamilnadu #tamilnews #ABPNADU pic.twitter.com/d6dnn7UDlu
— ABP Nadu (@abpnadu) March 16, 2026
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜோஸ் தங்கையா மாற்றம் செய்யப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் கரூர் மாவட்ட எஸ்.பி-யாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. கரூரில் இன்று பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பின போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இதுவரை மாற்றம் செய்ய வில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருந்த நிலையில், கரூர் எஸ்.பி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைபோல கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எம்பி இன்பதுரை வலியுறுத்திருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்ததுபோல கரூரிலும் வாக்காளர்களை அடைத்து வைக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசு செலவில் விளம்பரம் வருகிறது என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















