மேலும் அறிய

கரூர் மோசடி! ஜல்லிகூட இறக்கல.. போடாத ரோட்டுக்கு ரூ.8 கோடி கணக்கு - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் தார்சாலை குறித்து ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்த நிலையில் தற்போது இந்த தார்சாலை ஊழல் குறித்து நெடுஞ்சாலைத்துறை 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.

கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில், சாலை அமைக்காமலேயே அமைத்துவிட்டதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்துள்ளதாக, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின்பேரில் நெடுஞ்சாலைத்துறை விசாரணை நடத்தி அதிகாரிகள் 8 பேரை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது.

 


கரூர் மோசடி! ஜல்லிகூட இறக்கல.. போடாத ரோட்டுக்கு ரூ.8 கோடி கணக்கு -  4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!


கரூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தவும் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் சில பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பணி முடிக்கும் முன்னரே ஒப்பந்த தொகையை கோட்ட பொறியாளர்கள் ஒப்பந்ததாரருக்கு வழங்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 


கரூர் மோசடி! ஜல்லிகூட இறக்கல.. போடாத ரோட்டுக்கு ரூ.8 கோடி கணக்கு -  4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

பணி முடிக்கும் முன்னரே ஒப்பந்த தொகையை வழங்கிய செயல் சட்டத்துக்கு புறம்பானதாகும். உடனடியாக திருப்பூர் மற்றும் சேலம் கண்காணிப்பு பொறியாளர்கள் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். கண்காணிப்பு பொறியாளர்கள் அளித்த பூர்வாங்க அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய அரசு அறிவுறுத்தியது.

 


கரூர் மோசடி! ஜல்லிகூட இறக்கல.. போடாத ரோட்டுக்கு ரூ.8 கோடி கணக்கு -  4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!


கண்காணிப்பு பொறியாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கரூர் கோட்டப் பொறியாளர் ஆர்.பி.சத்தியபாமா, கரூர் உதவி கோட்டப் பொறியாளர் ஆர்.கண்ணன், கரூர் இளநிலை பொறியாளர் பூபாலசிங்கம், கரூர் கோட்டக் கணக்கர் கே.பெரியசாமி, ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த ஈரோடு கோட்டப் பொறியாளர் வெ.வெ.நித்திலன், கரூர் உதவி கோட்டப் பொறியாளர் முகமது ரபீக், கரூர் உதவிப் பொறியாளர் தீபிகா, ஈரோடு கோட்டக் கணக்கர் சத்யா ஆகியோர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

 


கரூர் மோசடி! ஜல்லிகூட இறக்கல.. போடாத ரோட்டுக்கு ரூ.8 கோடி கணக்கு -  4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

புகார் சம்பந்தமாக நேற்று கரூர் கோட்ட பொறியாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும், இந்த ஊழல் புகார் சம்பந்தமாக கூடுதலாக 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கரூர் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டை அடுத்து நேற்றும், இன்றும் 8 நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் இந்த ஊழல் சம்பந்தமாக ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது தமிழக நெடுஞ்சாலைத்துறை அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Embed widget