மாணவி பாலியல் புகாரில் இன்னொரு சார் இருக்கிறார்; போலீஸ் மறைக்கிறது : இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. கைதானா ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.
கைதானா ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக மாணவி புகாரில் தெரிவித்திருப்பதாகவும் அதை காவல்துறை மறைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. கைதானா ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு மட்டும் தான் தொடர்பு என காவல் ஆணையர் கூறியுள்ளார். அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலையில் சிசிடிவி கேமரா இல்லை என்பது வெட்கக்கேடானது. காவல் ஆணையர் சொல்லும் கருத்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் சொல்லும் கருத்தும் முரண்படுகின்றன. சரித்திர பதிவேடு குற்றவாளி பல்கலை வளாகத்தில் எப்படி நடமாட முடியும். அவருக்கு ஆளுங்கட்சியின் தொடர்பு என செய்திகள் வருகின்றன. வழக்கு நேர்மையாக நடக்க வேண்டும். அதற்கு சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.