கண், காது, மூக்கு வைத்து பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி
"முதல்வர், மக்களை பற்றி சிந்திப்பதே கிடையாது. வீட்டு மக்களை பற்றித்தான் கவலை. நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை" என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்!
சுற்றுப்பயணத்திற்கு மத்தியில் பேசிய இபிஎஸ், "ஐந்து ஆண்டு ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏறாலம். நன்மை என்று ஏதும் இல்லை. பெஞ்சல் புயலால் விழுப்புரம் நகரம் தண்ணீரில் மிதந்தது. மக்களுக்கு உணவு, குடிநீர் கூட வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் புயல்களை பார்த்து புயல் போல் செயல்பட்ட அரசு அதிமுக அரசு.
இந்த அரசு மோசமான அரசு. மக்களுக்கான திட்டங்களைப் கொடுக்க முடியவில்லை. புயல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக அரசில் இரண்டு முறை பயிர் கடன் ரத்து செய்யப்படது.
24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு அதிகப்படியான பயிர் காப்பீடு வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் அம்மா பல்கலைகழகம் கொண்டு வந்தோம். ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்டது.
கண், காது, மூக்கு வைத்து பேசுவதா?
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தோம் அதனையும் ரத்து செய்தது திமுக அரசு. திமுக அரசுக்கு 2026இல் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற 27 கோடி ஒதுக்கப்பட்டது.
அறநிலையத்துறையில் இருந்து கல்லூரி அமைப்பது அவசியம். ஆனால், அந்நிலைத்துறையில் இருந்து தொடங்கினால் முழுமையாக செயல்படுத்த முடியாது. அதனால் தான் அப்படி சொன்னேன். ஆனால், அதை வைத்து இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறுகிறது. திட்டமிட்டு அவதூர் பரப்புகிறார்கள். இது, கண்டனத்துக்குரியது.
41 பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரியாக மாற்றினோம். எங்கள் வரலாறு தெரியாமல் ஸ்டாலின் பேசக் கூடாது. பத்து ஆண்டில் அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே உயர் கல்வி கற்றவர்கள் சதவீதம் 54 சதவீதம். மாணவர்களுக்கு துரோகம் செய்த அரசு தேவையா.
மாணவர்கள் மீது அக்கறை உள்ள கட்சி அதிமுக. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர் இல்லை. அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டும்.
திமுக ஆட்சியில் மின் கட்டனம் 54 சதவீதம் உயர்த்தபட்டுள்ளது. வீடு வரி, கடை வரி, குடிநீர் வரி, குப்பை வரி போட்ட அரசு இந்த திமுக அரசு. முதல்வர், மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. வீட்டு மக்களை பற்றித்தான் கவலை. நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. மக்கள், இனி நிஜத்தில் வீடு கட்ட முடியாது. கனவில் தான் வீடு கட்ட முடியும். அந்த அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது" என்றார்.





















