சென்னை மக்களே! நந்தனம் பக்கம் போறீங்களா? – இன்று இசைக் கச்சேரி! போக்குவரத்து மாற்றம்!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக்கச்சேரியை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது. இதனால் நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சர்வதேச பாடகர் எட் வீரனின் 2025 இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக. 05.02.2025 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 15.00 மணி முதல் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.
Traffic arrangements made for the musical concert at YMCA Grounds, Nandanam, Chennai on 05.02.2025. 🚗🎶🎤
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) February 4, 2025
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 05.02.2025 அன்று இசை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Chennai #TrafficUpdate pic.twitter.com/HjmbyZIIVM
மேற்படி நிகழ்ச்சிக்கு தேனம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/ காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோடு, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இயக்கை அடையலாம்.
அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.எ பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ இரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார இரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

