பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி ரூ.27 கோடி வரை சொத்து சேர்ப்பு: விஜயபாஸ்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
C Vijayabaskar DVAC raids: தகவல்களின் அடிப்படையில், 2016-21 வரையிலான 5 ஆண்டு காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, 27 கோடி (27,22,56,736)வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளார்
வருமானத்திற்கு அதிகமான வகையில் சொத்து சேர்த்ததாக, அதிமுக முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துரையினர் இன்று காலை சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையன் படி, , முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமான வகையில் சொத்து சேர்த்தது போன்ற குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், 2016-21 வரையிலான 5 ஆண்டு காலத்தில், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தி, ரூ.27 கோடி (27,22,56,736) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளார்.
முக்கிய புள்ளிவிவரம்:
1 .2016ம் ஆண்டு விஜயபாஸ்கர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிகர சொத்து மதிப்பு - 6 கோடி (ரூபாய் 6,41,91,310)
2.a 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது துணைவியாரின் சட்டப்பூர்வ வருமானம்- ரூபாய்.58 கோடி (58,64,25,887).
2.b 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது துணைவியார் மேற்கொண்ட செலவீனம்- ருபாய் - 34 கோடி (34,51,62,529)
2.c எனவே, 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது துணைவியாரின் சேமிப்பு தொகை ரூபாய்- 24 கோடி (24,12,63,358) 2(a)- 2(b)
3. 2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மட்டும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 57 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
4. எனவே, சேமிப்புத் தொகையை (3-2c) விட கூடுதலாக 27 கோடி (27,22,56,736) வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், இழுப்பூர் கிராமத்தில் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் பேரில் மதர் தெரசா கல்வி மற்றும் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் தான் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதன் அடிப்படையில், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என மொத்தம் 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்