காஞ்சிபுரம்: கனமழை எச்சரிக்கை! பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - முக்கிய அறிவிப்பு வெளியீடு
"மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கையாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்"

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (22.10.2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் கனமழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினத்திலிருந்து தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அருகில் உள்ள செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விடியற்காலை முதலில் காஞ்சிபுரத்தில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்று (22-10-2025) மழை முன்னறிவிப்பு என்ன ?
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (23-10-2025) மழை முன்னறிவிப்பு என்ன ?
வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.




















