மேலும் அறிய

சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் தீக்குளித்த பழங்குடி கூலித் தொழிலாளி உயிரிழப்பு.. சம்பவ இடத்தில் நிகழ்ந்தது என்ன?

சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் தீக்குளித்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்  தீக்குளித்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தியாவில் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தகுந்த முன்னுரிமையும், வழங்க வேண்டும் என்பதற்காகவும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கக் கூடிய உரிமையை பெற முக்கிய ஆவணமாக சாதிச் சான்றிதழ் உள்ளது. 

அதேநேரத்தில் இந்திய அளவில் ஒரு மாதிரியான இட ஒதுக்கீடும் மாநில அளவில் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் பழங்குடி மக்களாக, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 

இவர்களுக்காக அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டினை முழுமையாக இவர்கள் அனுபவிக்க முடியாமல் போகும் சூழல் இன்று வரை உள்ளது. மலைவாழ் மக்களும் பலமுறை அரசு அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்தாலும் சாதிச் சான்றிதழ் இன்று வரை பலருக்கு எட்டாக் கனியாகத்தான் உள்ளது. சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பழங்குடி சேர்ந்தவர், சான்றிதழ் கிடைக்காததால் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல் முருகன்(49). பழங்குடி சமூகத்தினைச் சேர்ந்தவரான இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனது மகனின் உயர் கல்விக்காக சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு வாசலிலின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீயை பற்றவைத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் நடந்து சென்றார். மேலும், கையில் அவர் வைத்திருந்த பெட்ரோலை மீண்டும் தன் மீது ஊற்றிக் கொண்டே இருந்தார். இதனால் யாரும் அவரிடம் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் மீது இருந்த தீயை  காவல் துறையினர் அணைத்தனர். அதன் பின்னர் வேல்முருகன், “நான் மலைகுறவன் சமூகத்தைச் சார்ந்தவன். எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தும் அரசு அலுவகத்திற்கு பலமுறை அலைந்து பார்த்து விட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே இந்த முடிவினை எடுத்தேன். இனியாவது உடனடியாக சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என நம்புகிறேன்” என சத்தமாக கத்தியுள்ளார். 

தீக்காயங்களுடன் இருந்த வேல்முருகனை காவல் துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தீக்குளித்த சம்பவமே பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், வேல்முருகனின் இறப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

பழங்குடி மக்கள் சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை விண்ணப்பித்தாலும் பல்வேறு அரசு அலுவலகர்கள் சான்றிதழ் வழங்குவதில் பெரும் அலட்சியப் போக்கினையே கடைபிடிக்கின்றனர். சான்றிதழுக்காக உயிரிழப்பு எனும் அவலநிலை என்றைக்கு மாறுமே என்பதற்கு அரசுத்தரப்புதான் பதில் சொல்லவேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget