DMK Salem Manadu: ”எனது சுறுசுறுப்புக்கு காரணமானவர்கள்..” - திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஸ்டாலின் வாழ்த்து
DMK Salem Manadu: திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்தற்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்து வீடியோ:
இதுதொடர்பான பதிவில், “இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் அன்பும் நன்றியும்” என உதயநிதி பதிவிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறி பேசும் வீடியோ பதிவு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அந்த உரையில், “நான் எப்போதும் சுறுசுறுப்பாக்அ இருக்க காரணமே இளைஞரணிதான். என்னை உழைக்க வைத்து உற்சாகமூட்டியது இளைஞரணியிர் தான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி எப்போதும் இருப்பதால் தான் நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். ஏராளமான தளபதிகளை உருவாக்கிய, உருவாக்குகிற ஈடு இணையற்ற அணி தான் இளைஞரணி.
கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த வாய்ப்பளித்து வாழ்த்தியுள்ள கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!#DMKYW4StateRights pic.twitter.com/n6N6pCOCmP
— Udhay (@Udhaystalin) January 21, 2024
இன்றைக்கு இளைஞரணியை வழிநடத்த உதயநிதி கிடைத்துள்ளார். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். திமுகவில் இளைஞரணி என்ற ஒன்றை உருவாக்க கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் நினைத்தார்கள். ஏராளமான இளைஞர்கள் திமுகவுஇல் சேருவதால் அவர்களை வழி நடத்த வலிமையான இளைஞரணி வேண்டும் என்று நினைத்தார்கள். 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. இந்தியாவ்லேயே ஓர் அரசியல் கட்சியில் இளைஞரணி தொடங்கப்பட்டது அதுவே முதல்முறை. இளைஞரணிக்கு சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு 1981ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புடல் பெறப்பட்டது. 1983ம் ஆண்டு இளைஞரணியின் இரண்டாவது ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திமுக இளைஞரணிக்கு 5 பேர் கொண்ட அமைப்புக்குழு 1983ல் ஏற்படுத்தப்பட்டது. அதில் நானும் இடம்பெற்று இருந்தேன். அன்றில் இருந்துதான் இளைஞர் படையை வழிநடத்தும் பெரும் பொறுப்பு என்னிடம் சேர்ந்தது. திமுக இயக்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணி தான் அடித்தளம் அமைத்தது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.