TVK Vijay: விஜய் டீ-ஷர்ட் எரிச்சா இப்படித்தா பேசுவீங்களா.. தவெக தொண்டர்களுக்கு வைஷ்ணவி எச்சரிக்கை!
போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரிக்கும்போது விஜய் படம் போட்ட டீ-ஷர்ட்டை வைஷ்ணவி எரித்தது தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

போகி பண்டிகையை முன்னிட்டு திமுகவில் செயல்பட்டு வரும் கோவை மாவட்ட நிர்வாகியான வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் படம் போட்ட டீ-ஷர்ட்டை எரித்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கிய காலக்கட்டத்தில் மிகப்பெரிய துடிப்புடன் செயல்பட்டு வந்தார். ஆனால் அக்கட்சியில் பெண்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை எரிக்கும்போது விஜய் படம் போட்ட டீ-ஷர்ட்டை வைஷ்ணவி எரித்தது தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வைஷ்ணவி, “நான் ஒரு காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பயணம் மேற்கொண்டேன். ஒரு கட்டத்தில் அரசியல் புரிதல் வந்து விட்டது. தவெக கொள்கை மேடைகளில் மட்டுமே பின்பற்றுகிறார்கள். களத்தில் அக்கட்சி இளைஞர்களை ஆதரிக்கவில்லை. சொல்லும் எதையும் தவெக தலைவர் விஜய் செய்வதில்லை. மக்கள் பணியில் ஈடுபடுவதில்லை என்பதால் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 2025ம் ஆண்டு மே மாதம் வெளியேறி இருந்தேன்.
இப்படியான நிலையில் 2026 போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என்ற நிலையில் என்னிடம் இருந்த அந்த டி-ஷர்ட்டை எரித்தேன். என்னிடம் இருந்த பழைய பொருட்களை வீட்டில் உள்ளவர்கள் எடுத்து வர சொன்னார்கள். அதை நான் எரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இதற்கு தவெக தொண்டர்கள் எதிராக கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். வைஷ்ணவியை ஆபாசமாக சித்தரிப்பதை விட, அவர்களுக்கு எதிரான கொள்கையில் ஒரு பெண்ணை தொண்டர்கள் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடுகிறார்கள். இதனை தவெக தலைவர் விஜய் எதிர்த்து எந்த குரலும் எழுப்பவில்லை. அவரின் கீழ் செயல்படும் விர்ச்சுவல் வாரியர்ஸ் அணியும் எதையும் செய்யவில்லை.
பழையதை எரிப்பது போகி….
— Vaishnavi (@vaishnavi_cbe) January 14, 2026
இனிய போகி திருநாள் நல்வாழ்த்துக்கள் pic.twitter.com/JO35Dnm5Xx
ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பெண் தவெகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஆபாசமாக சித்தரிப்பார்களா?. நான் அந்த தொண்டர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அவர்களுக்கு சரியான புரிதல் இல்லை. அது ஒருநாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சனாதன தர்மத்துக்கு எதிராக பேசிய உதயநிதி தொடங்கி எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா, பிரதமர் மோடி என பலரின் புகைப்படங்களும் போராட்டத்தின் போது எரிக்கப்படுகிறது. அதற்காக அவர்களை எரிப்பதாக அர்த்தமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் செயல்களையும், எண்ணங்களையும் எரிக்கிறோம். மக்கள் பணியை விஜய் எடுத்து செய்யவில்லை” என கூறியுள்ளார்.





















