மேலும் அறிய

Election 2024: பாசிசம் வீழும்! I.N.D.I.A வெல்லும்! அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!

Election 2024: மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பரப்புரையை திமுக தொடங்கிவிட்டதாக முதலமைசரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும் என திமுக தலைவரும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,” தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்! பாசிசம் வீழும்! I.N.D.I.A வெல்லும்! என குறிப்பிட்டுள்ளார். 

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணிக்குள் உள்ள கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. 

I.N.D.I.A கூட்டணியில் தமிழ்நாடில் தலைமை வகிக்கும் திமுக, தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பரப்புரையை தொடங்கியதாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “ 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, கழக முன்னணியினர் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க கழகத் தலைவரின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.  

இதனடிப்படையில் நேற்று அதாவது பிப்ரவரி  16ஆம் தேதி கீழ் குறிப்பிட்டுள்ள இடங்களில் திமுக தரப்பில் பிரச்சரம் மேற்கொள்ளப்பட்டது. 

நாள் : 16-2-2024 (வெள்ளிக்கிழமை)

சிவகங்கை - இ.பெரியசாமி

திருநெல்வேலி - கனிமொழி கருணாநிதி, எம்.பி.

விழுப்புரம் - ஆர்.எஸ்.பாரதி

தூத்துக்குடி - பொன் முத்துராமலிங்கம்

கடலூர் - எஸ்.எஸ்.சிவசங்கர்

திருபெரும்புதூர் - மா.சுப்பிரமணியன்

ஈரோடு - அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நாமக்கல் - தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி.,

கன்னியாகுமரி - திண்டுக்கல் ஐ.லியோனி

மயிலாடுதுறை - பேராசிரியர் சபாபதிமோகன்

திருவண்ணாமலை -  கோவி.செழியன்

அதேபோல் இன்றும் நாளையும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் திமுகவினர் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர். 

நாள்: 17-2-2024 (சனிக்கிழமை)

கிருஷ்ணகிரி -  பொதுச்செயலாளர் துரைமுருகன்

திருச்சி - கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு,

திருப்பூர் - கே.என். நேரு 

அரக்கோணம் - முனைவர் க. பொன்முடி

மதுரை - ஆ.இராசா, எம்.பி.

விருதுநகர் - கனிமொழி கருணாநிதி, எம்.பி.

இராமநாதபுரம் - உதயநிதி ஸ்டாலின்

வேலூர் - எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி - மா.சுப்பிரமணியன்

கோவை - அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திண்டுக்கல் - பொன். முத்துராமலிங்கம்

சிதம்பரம் - முனைவர் கோவி.செழியன்

நாள் : 18-2-2024 (ஞாயிற்றுக்கிழமை)

திருவள்ளூர் - பொதுச்செயலாளர் துரைமுருகன்

தஞ்சாவூர் - கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி

பெரம்பலூர் - முனைவர் க.பொன்முடி

கரூர் - ஆ.இராசா, எம்.பி.

புதுச்சேரி - ஆர்.எஸ்.பாரதி 

பொள்ளாச்சி - திருச்சி சிவா

காஞ்சிபுரம் - எ.வ.வேலு 

தருமபுரி - எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி

நாகப்பட்டினம் - எஸ்.எஸ். சிவசங்கர்

தேனி - பொன் முத்துராமலிங்கம்

நீலகிரி - திண்டுக்கல் ஐ.லியோனி

தென்காசி - முனைவர் சபாபதிமோகன்

சேலம் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

ஆரணி -  முனைவர் கோவி.செழியன்

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget