திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைகிறாரா...?
திமுகவின் முக்கிய மற்றும் மூத்த உறுப்பினரின் மகன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது கேரளாவில் இருக்கும் அண்ணாமலை தமிழ்நாடு வந்ததும், அவரை சந்தித்து கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
திமுகவின் பிரபல பேச்சாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவுள்ளது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி ஓராண்டு நிறையவடைய உள்ள நிலையில், அதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் முக்கிய மற்றும் மூத்த உறுப்பினரின் மகன் பாஜகவில் இணைய உள்ளதாக வரும் செய்தி அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட நேர்க்காணலில் பங்குகொண்ட சூர்யாவுக்கு தேர்தல் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவருக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது திமுக ஆட்சி ஓராண்டு ஆன நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
வருங்கால தமிழகம் கழகத்தலைவர் #தளபதியார் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டபோது.🖤❤️ @arivalayam pic.twitter.com/RE5CnFNfUg
— Suriyaa Sivaa (@SuriyaaSivaa) March 4, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்