அன்று மேல்பாதி; இன்று விழுப்புரம்... அமைச்சர் பொன்முடி பதவி பறிப்பு - நடந்தது என்ன?
மேல்பாதி விவகரம் தொடங்கிய ஒரு சில நாட்களில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பொன்முடியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவருமான கனிமொழி அதிரடியாக கண்டனம் தெரிவித்துதுள்ளார்.
கடந்த வாரம் திருவாரூரில் திராவிடர் கழக விழாவில் அமைச்சர் பொன்முடி, விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்ற கேட்டு அதற்கு கீழ்தரமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது. அரசியலில் மூத்த நபர், திமுகவின் முக்கிய தளகர்த்தர், அமைச்சர் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் அவர் இவ்வாறு கொச்சையாக பேசியுள்ளதாகவும், இவர் அமைச்சர் பொறுப்பை வகிக்க தகுதி அற்றவர் என்ற வகையிலும் அவருக்கு எதிராக கடும் எதிர்வினைகள் வந்துக்கொண்டிருந்தன.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி நேரடியாக பொன்முடியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவில் விவகாரமும்... பதவி பறிப்பும்....
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் விவகாரம்
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபடுவது தொடர்பாக இரு சமூக மக்களிடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவின் போது வழிபட கோயிலுக்குள் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது பட்டியலின மக்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சமூக மக்களுக்கு எதிராகவும் திமுக அமைச்சர் பொன்முடி பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தங்கள் சமூக மக்களை இழிவுப்படுத்தி ஒரு சமூக மக்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து மேல்பாதி கிராமத்தில் உள்ள சர்ச்சைக்குரிய திரவுபதி அம்மன் கோயிலை கதவுகளை பூட்டி, அதன் நுழைவு வாயிலில் அமர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஒரு சில நாட்களில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
விழுப்புரம் முத்து மாரியம்மன் கோவில் விவகரம்
விழுப்புரம், வி.மருதுார் பவர் அவுஸ் சாலையில், ரயில்வே ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளையும், அங்குள்ள ஸ்ரீ முத்து அம்மன் கோவிலையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு அமைச்சர் பொன்முடி, இலவச பட்டா வழங்கியபோது, பட்டா வாங்க மறுத்த பெண்கள், 'நகரில், 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டை அகற்றி, 5கி.மீ.,யில் உள்ள கிராமத்தில் வழங்குவதை ஏற்க மாட்டோம். நகரில் மாற்று இடம் வேண்டும் என, வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், இன்று அமைச்சர் பொன்முடி வீட்டின் அருகே பவர் ஹவுஸ் சாலையில் உள்ள 75 வருட பழமையான மாரியம்மன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. அப்போது பெண்கள் அமைச்சர் பொன்முடியால் தான் இந்த கோவில் இடிக்கபடுகிறது என்றும் அவர்கள் கதறி அழுத சம்பவம் பார்போரை கண்கலங்க வைக்கும்படி இருந்தது, இந்நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி கழக துணை பொதுச்செயலாளர் பதவியை பறிகொடுத்துள்ளார்.

