மேலும் அறிய

எம்.எல்.ஏ.வால் தொடரும் பிரச்னை.. சிக்கலில் நெல்லை மாவட்ட திமுக.. திணறும் தலைமை!

நெல்லை மாவட்ட திமுகவில் உட்கட்சி மோதலால் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்துல் வஹாப் இரண்டாவது முறையாக சீட் கேட்டபோது கொடுக்கக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்தும் கொடுக்கப்பட்டது.

திருநெல்வேலியில் திமுக எம்.எல்.ஏ. - மேயர் இடையே உச்சக்கட்ட உட்கட்சி மோதல் போக்கு நிலவி வருவது அக்கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. 

திமுக எம்.எல்.ஏ. - மேயர் இடையே தொடரும் மோதல்

2021ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் அப்துல் வஹாப். 2026 சட்டமன்ற தேர்தலில் இவர் தான் வென்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் அப்துல் வஹாப் மீது ஏகப்பட்ட புகார்கள் திமுக தலைமைக்கு சென்றது. அப்துல் வஹாப் தான் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். அப்போது மேயராக இருந்த சரவணனுக்கு, மாவட்டச்செயலாளராக இருந்த அப்துல் வஹாப்பிற்கும் இடையே கமிஷன் பெறுவதில் மோதல் நிலவியதாக சொல்லப்பட்டது. 

இதுதொடர்பாக திமுக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீரவில்லை. அதேசமயம் அப்துல் வஹாப்பிற்கு ஆதரவாக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்க அவர் தன் பதவியை இழந்ததோடு மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார்.  இதனைத் தொடர்ந்து அப்துல் வஹாப் ஆதரவாளராக இருந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணனுக்கு மேயர் பதவி கிடைத்தது. அவர் தற்போது வரை செயல்பட்டு வருகிறார். அதேசமயம் அப்துல் வஹாப்பிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் வழங்கப்பட்டது. 

Also Read: JanaNayagan: ஜனநாயகன் பார்த்தால் எப்படி அழுகை வரும்? - விஜயை வம்பிழுத்த ராஜேந்திர பாலாஜி!

மேயர் வீடு புகுந்து கொலை மிரட்டல்

ஆனால் மேயர் ராமகிருஷ்ணனுக்கும், அப்துல் வஹாப் இடையே 44 ஏக்கர் நிலம் தொடர்பாக மோதல் உண்டானதாக கூறப்படுகிறது. மாவட்ட திமுகவில் தீவிர உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் சமீபத்தில் மேயர் ராமகிருஷ்ணன் வீடு புகுந்து இரு இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். அந்த இளைஞர்கள் இருவரும் அப்துல் வஹாப் ஆதரவாளர்கள் என சொல்லப்படுகிறது. நெல்லை மாவட்ட திமுகவில் தங்களது இருப்பை தக்க வைக்க இருதரப்பும் முட்டி மோதி வருகிறது. இந்த நிலையில் திமுக கவுன்சிலர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெகு விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. ஏற்கனவே இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தவிர மீதமுள்ள 4  தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வென்றது. நூழிலையில் தான் அப்துல் வஹாப் ஜெயித்தார். இப்படியான நிலையில் உட்கட்சி மோதலால் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்துல் வஹாப் இரண்டாவது முறையாக சீட் கேட்டபோது கொடுக்கக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்தும் சட்டமன்ற தேர்தலில் திமுக வாய்ப்பு வழங்கியிருந்தது. 

ஆனால் தொடர்ந்து அப்துல் வஹாப் தலையீட்டால் திமுகவினரிடையே  அடுத்தடுத்து பிரச்னை வெடித்து வருவது தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget