வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாத துணிகள் என்னென்ன?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

வாஷிங் மெஷினில் அனைத்து வகையான துணிகளையும் துவைப்பதால் துணிகள் சேதமடையும். மெஷினும் கூட பழுதடையலாம்.

Image Source: Pexels

பட்டு இயந்திரத்தில் துவைப்பதால் அதன் இழைகள் பலவீனமடைந்து அறுந்துவிடும். அதன் பளபளப்பு மங்கிவிடும்.

Image Source: Pexels

கம்பளி ஆடைகள் இயந்திரத்தில் துவைக்கும்போது சுருங்கி கிழிந்துவிடும்

Image Source: Pexels

தோல் மற்றும் ரேயான் துணிகளை இயந்திரத்தில் சுழற்றுவதால் கிழிந்துவிடும்

Image Source: Pexels

கனமான எம்பிராய்டரி அல்லது சீக்வென்ஸ் வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு இயந்திரத்தை சேதப்படுத்தலாம்

Image Source: Pexels

மென்மையான துணிகள் இயந்திர டிரம்முக்குள் சிக்கிக்கொண்டு எளிதாக கிழிந்துவிடும்

Image Source: Pexels

பேடட் ப்ராக்களை மெஷினில் துவைப்பதால் அவற்றின் கப் வடிவம் கெட்டுவிடும் அவற்றின் கொக்கிகள் மற்ற துணிகளில் சிக்கிக்கொள்ளலாம்

Image Source: Pexels

சூட் பிளேசரை மெஷினில் துவைக்கும்போது அவற்றின் லைனிங் முற்றிலும் சேதமடைந்துவிடும்

Image Source: pexels

ஒட்டப்பட்ட பேட்ச்கள் அல்லது பிரிண்ட்கள் உள்ள ஆடைகளை மெஷினில் துவைப்பதால் அவற்றின் பசை நீங்கிவிடும் பிரிண்ட் அழிந்துவிடும்

Image Source: pexels