மேலும் அறிய

ஆட்டமா போட்றீங்க? மாவட்டச் செயலாளர்கள் அதிகாரத்தை குறைக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - ப்ளான் இதுதான்

திமுக-வின் தோல்வியைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் திமுக மிக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. மிக எளிதாக வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். குறிப்பாக, கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். 

தோல்விக்கு காரணம் என்ன?

திமுக-வின் இந்த தோல்விக்கு இன்ஸ்டாகிராம், விஜய் மீதான கவர்ச்சி என்று பல்வேறு காரணங்களை திமுக வெளியில் கூறினாலும் உண்மையில் அவர்கள் தோல்விக்கு கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள முக்கிய தலைவர்களும், மாவட்டச் செயலாளர்கள் பலரும் சரியாக பணியாற்றாததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

இந்த முறை வேட்பாளர்கள் நியமனத்தில் மூத்த தலைவர்கள், பல மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு இதுதொடர்பான குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேட்பாளர்கள் பலரும் முறையிட்டுள்ளனர். 

குவிந்த புகார்கள்:

தங்களுக்கு கீழ் பல தொகுதிகள் இருக்கும் அதிகாரத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் அலட்சியமாகவும் அதிகாரப்போக்கிலும் பல ஆண்டுகளாக செயல்படுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. இதனால், கட்சியின் மாவட்ட ரீதியாக இரண்டாம் கட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க திட்டம்:

தேர்தல் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணமாக கருதப்படுவதால் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், ஒரு மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சம் அவரது கட்டுப்பாட்டில் 3 மாவட்டங்களே இருக்கும் வகையில் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. 

இதன் காரணமாக, தற்போது 78 ஆக இருக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்த வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், அதிகாரத்தில் ஆட்டம் போடும் மாவட்டச் செயலாளர்கள் சிலரின் அதிகாரப்போக்கை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட நாட்களாக பணியாற்றி வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால், அவர்கள் திறம்பட பணியாற்றுவார்கள் என்றும் கட்சித் தலைமை நம்பிக்கையுடன் உள்ளது. 

புதியவர்களுக்கு வாய்ப்பு:

இதன்மூலமாக சரியாக பணியாற்றதவர்களின் அதிகாரம் குறைக்கப்படுவதுடன், கட்சியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு  அளித்து அவர்களையும் திறம்பட பணியாற்ற வைக்கலாம் என்று கட்சி கருதுகிறது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விரைவில் திமுக-வில் இந்த மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  புதிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் யார்? யார்? என்பதை பட்டியல் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு: 142 அடி நீர்மட்டத்தை உயர்த்தினால் நீதிமன்றம் செல்வோம் - கேரளா எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget