மேலும் அறிய

Neet Row | தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது திமுக - ஒ.பி.எஸ் காட்டம் !

கல்வியை மாநிலப் பட்டியலில் திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம் என ஓ.பி.எஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "நீட் தேர்வு ரத்து என்பதற்கான சட்டப் போராட்டத்தை அரசு துவக்கி விட்டதாகவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க.வும், அதன் நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும் இறுதி வரை போராடும்" என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்னைகள் இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

Neet Row | தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது திமுக - ஒ.பி.எஸ் காட்டம் !
நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், 'தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று தான் தி.மு.க. தலைவர்களால் மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. அதை நம்பித்தான் தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன வழியைப் பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.க.வும் பின்பற்றி இருக்கிறது. அதாவது, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த வாதத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைத்தால், இதற்காக குழுவை அமைத்து, அதன் பிறகு தான் சட்டமுன்வடிவினை நிறைவேற்றினோம். என்று தி.மு.க. கூறக்கூடும். ஆனால், அந்தக் குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. இது அரைத்த மாவையே அரைப்பதற்கு சமம். வெறும் சம்பிரதாயத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

Neet Row | தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது திமுக - ஒ.பி.எஸ் காட்டம் !
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே 'சட்டப் போராட்டத்தை அரசு துவக்கிவிட்டது' என்று சொல்லும்போது, அவருக்கே இந்தச் சட்டமுன்வடிவுக்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகள் போல பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடக்கும் என்பது தான் 'சட்டப் போராட்டத்தை அரசு துவக்கிவிட்டது' என்பதற்கான உள்ளார்ந்த பொருள் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
 
அடுத்தபடியாக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, நடுவில் 13 மாதங்கள் தவிர, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.வின் தயவில் தான் மத்திய அரசுகளே இருந்தன. அப்பொழுதெல்லாம், மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத தி.மு.க., இப்போது மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில், 'கல்வி'யை மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.

Neet Row | தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது திமுக - ஒ.பி.எஸ் காட்டம் !
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தின் போது சிறிது காலமும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது 13 மாதங்களும் தான் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. தி.மு.க.வைப் போல் 17 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்திருந்தால், இந்த நேரத்திற்கு 'கல்வி' மாநிலப் பட்டியலில் மீண்டும் வந்திருக்கும் என்பதை இங்கே அழுத்தந்திருத்தமாக சுட்டிக்காட்ட விழைகிறேன்.
 
தற்போது, தி.மு.சு. கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் வர உள்ளன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசிற்கு தேவையான அழுத்தம் கொடுத்து, 'நீட் தேர்வு ரத்து' என்ற அறிவிப்பினைச் செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்
 

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget